Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் நடுவே ஸ்டம்புகளை மறைத்த படி ஓடினார்.
ஐபிஎல் 2024:
ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடின.
இன்றய போட்டியில் சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் நடுவே ஸ்டம்புகளை மறைத்த படி ஓடினார். இதனால் அவருக்கு மூன்றாவது நடுவர் விக்கெட் கொடுத்து வெளியேற்றியுள்ளார். முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.
வைரல் வீடியோ:
Ravindra Jadeja given out obstructing the field.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2024
- 3rd time happened in IPL history. pic.twitter.com/lJNolzBc1L
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழபிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு சென்னை அணிக்கு இருக்கிறது.