மேலும் அறிய

PBKS vs RCB, IPL 2023: ஐபிஎல் தொடர் பஞ்சாப் - பெங்களூரு இன்று மோதல்.. புள்ளிப்பட்டியலில் முன்னேறப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. மொஹாலியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி, மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

பஞ்சாப் - பெங்களூரு மோதல்:

ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது. மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சி வாயிலாகவும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பஞ்சாப் அணி:

பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், வலுவான லக்னோ அணியை வீழ்த்திய உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. ஷிகர் தவான், சிகந்தர் ராஜா, சாம் கர்ரன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். அவர்களுக்கு ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சில் பக்க பலமாக உள்ளனர். நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, அதில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி நிலவரம்:

பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி கண்டது. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை பார்ப்பதற்கு சமபலமாக இருப்பதை போன்றே தோன்றினாலும், அவை இரண்டும் வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்படாததே பெங்களூரு அணியின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. கோலி, டூப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் அசுர ஃபார்மில் உள்ளனர். ஆனால், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் மற்றும் பார்னெல் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவது பெங்களூருவின் வெற்றியை பாதிக்கிறது. நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, அதில் இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

மைதானம் எப்படி?

மொஹாலி மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இன்றைய போட்டியும் ஹை-ஸ்கோரிங் போட்டியாக இருக்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, இலக்கை சேஸ் செய்யவே விரும்பும்.

சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலி இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது

சிறந்த பந்துவீச்சாளர்: சாம் கர்ரன் இன்றைய போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராக திகழக்கூடும்

யாருக்கு வெற்றி வாய்ப்பு? : இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget