IPL 2023PBKS vs KKR 1st Innings Highlights: ராஜபக்சே அதிரடி அரைசதம்... கடைசியில் கலக்கிய சாம்கரண்..! 192 ரன்களை எட்டுமா கொல்கத்தா?
IPL 2023PBKS vs KKR 1st Innings Highlights: கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் போட்டித்தொடர் நேற்று அதாவது மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. போட்டித்தொடரின் இரண்டாவது போட்டியில், இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு சீசன்களில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியும் மொஹாலியில் மோதிக் கொண்டன. இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ராணா பந்து வீச முடிவு செய்தார். இதன் படி, பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் இந்த தொடரில் கொல்கத்தா 'A' பிரிவுலும் பஞ்சாப் 'B' பிரிவிலும் இடம் பெற்றுள்ளது.
பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிராப் சிம்ரன் சிங் ஜோடி தொடங்கியது. முதல் இரண்டு ஓவர் முழுவதும் பேட்டிங் செய்த சிம்ரன் அதிரடியாக விளையாடி 23 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை 2வது ஓவரின் கடைசிப் பந்தில் இழந்தார். அதன் பின்னரும் தனது அதிரடியை குறைத்துக் கொள்ளாத பஞ்சாப் அணி சிறப்பாக ரன்கள் சேர்த்தது. ஒன் - டவுனாக களமிறங்கிய ராஜபக்ஷா அதிரடி காட்ட பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 56 ரன்கள் சேர்த்து இருந்தது.
ராஜபக்ஷா அரைசதம்
தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த இந்த ஜோடி பஞ்சாப் அணியின் ரன் ரேட்டை 10க்கும் குறையாமல் பார்த்துக் கொண்டது. கேப்டன் ஷிகர் தவான் ராஜபக்ஷாவுக்கு தொடர்ந்து ஸ்ட்ரைக் வழங்கி வந்தார். இதனால் பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 100 ரன்கள் எட்டியது. இந்த ஜோடியை உடைக்க ராணா போராடினார். இவருக்கு 11வது ஓவரை வீசிய யுமேஷ் யாதவால் பலன் கிடைத்தது. 11 ஓவரின் ஐந்தாவது பந்தில் அரைச்தத்தினை எட்டிய ராஜபக்ஷா அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியாறினார்.
இதன் பின்னர் ஷிகர் தாவனுடன் கை கோர்த்த ஜிதேஷ் சர்மா அதிரடி காட்ட, டிம் சவுதி பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தா. நிதானமாக விளையாடி வந்த ஷிகர் தவான் 29 பந்தில் 40 ரன்கள் சேர்த்த நிலையில், வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் க்ளீன் போட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர், கைகோர்த்த ராஸ் மற்றும் சாம் கரண் ஜோடி ரன் குவிப்பில் முடிந்தவரை ஈடுபட்டது.
16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. 18வது ஓவரில் ராஸ் தனது விக்கெட்டை இழக்க, சவாலான ஸ்கோரை பஞ்சாப் எட்டுமா எனும் கேள்வி எழுந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி சார்பில் டிம் சவுதி மட்டும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.