மேலும் அறிய

PBKS vs KKR ipl 2023: ஐ.பி.எல். வரலாற்றில் கோலோச்சும் கொல்கத்தா முதலில் பவுலிங்...! பழிதீர்க்குமா பஞ்சாப்?

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் 16வது சீசன்:

நேற்று பிரமாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் குஜராத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்தநிலையில், தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. மொஹாலி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில்,  டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில்,  இரு அணிகளும் நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டி வருகின்றன. 

கொல்கத்தா அணி நிலவரம்:

கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக நிதிஷ் ராணாவை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ராணாவின் கேப்டன்ஷிப் எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது போட்டியின் முடிவுகள் மூலம் தெரிய வரும். கொல்கத்தா அணியை பொறுத்தவரை சுனில் நரைன், ரஸல், லாக்கி பெர்குசன்,  ரஹ்மானுல்லா குர்பாஸ் முக்கிய வெளிநாட்டு வீரர்களை பக்கபலமாக கொண்டுள்ளது. 

பஞ்சாப் அணி நிலவரம்:

அதேபோல், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானின் அனுபவம் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பேர்ஸ்டோவுக்கு பதிலாக மேத்யூ ஷார்ட்டை பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் லியாம் லிவிங்ஸ்டோன் பஞ்சாப் அணிக்காக தொடக்க லீக் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சாம் கரன், நாதன் எல்லிஸ், பானுகா ராஜபக்சே மற்றும் டி20 உலகக் கோப்பையில் கலக்கிய சிக்கந்தர் ராசாவை  பஞ்சாப் அணி கைக்குள் வைத்துள்ளது. 

பிட்ச் எப்படி..? 

மொஹாலி பிட்சின் மேற்பரப்பு எப்போதும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும். எனவே, அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நினைப்பில் உள்ளே வராமல் கவனத்துடன் தொடங்க வேண்டும். போட்டியானது சிறிது நேரத்திற்கு பிறகு பேட்டிங் சாதகமாக அமையும்.  முதலில் டாஸ் வெல்லும் அணி பந்துவீசினால் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறந்த பேட்ஸ்மேன்:

கடந்த பல மாதங்களாக இந்திய அணியில் இருந்து உட்கார வைக்கப்பட்ட சூழ்நிலையில், தான் யார் என்பதை நிரூபிக்க தவான் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்வார். ஏற்கனவே, ஷிகர் தவானுக்கு ஐபிஎல் அணியை வழிநடத்திய அனுபவம் உண்டு. இருப்பினும், பேட்டிங்கில்தான் அவரது முழு கவனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறந்த பந்துவீச்சாளர்:

சுனில் நரைனின் பந்துவீச்சு பல ஆண்டுகள் கடந்த பிறகு இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கடந்த சில சீசன்களாக விக்கெட்களை எடுக்கவில்லை என்றாலும், ரன்களை கட்டுப்படுத்துகிறார். இவரது பந்துவீச்சால் பஞ்சாப் அணியை நிச்சயம் கதிகலங்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்:

இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 20 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆதிக்கத்தை நடப்பு தொடரிலும் தொடர கொல்கத்தா அணியும் முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget