MI vs SRH LIVE Score: இமாலய இலக்கை வெறியோடு துரத்திய மும்பை; 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!
IPL 2024MI vs SRH LIVE Score: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் லீக் போட்டி தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
ஐபிஎல் தொடர் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், 17வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக நாளுக்கு நாள் போட்டிகள் ரசிகர்களுக்கு ஆர்வத்தினை அதிகரித்து வருகின்றது. இதுவரை 7 லீக் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் இந்த ஏழு போட்டிகளிலும், உள்ளூர் மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் அடிப்படிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியின் அருகில் சென்று வெற்றியை தவறவிட்டது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சேஸிங் செய்ய முயற்சி செய்து தோல்வியைத் தழுவியது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெளியூர் மைதானங்களில் விளையாடி தோல்வியைத் தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று தனது உள்ளூர் மைதானமான ராஜீவ்காந்தி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகின்றது. இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கரங்களே உயர்ந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் ஹைதராபாத் அணி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது.
இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், புள்ளிப்பட்டியலில் அந்த அணி குறைந்த பட்சம் 4வது இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
ராஜீவ்காந்தி மைதானம் வழக்கமாகவே பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் இரு அணிகளும் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்புள்ளது. பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கலாம்.
இமாலய இலக்கை வெறியோடு துரத்திய மும்பை; 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!
277 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
MI vs SRH LIVE Score: ஹர்திக் பாண்டியா அவுட்!
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 20 பந்தில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
MI vs SRH LIVE Score: 200 ரன்களை எட்டிய மும்பை இந்தியன்ஸ்!
16.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
MI vs SRH LIVE Score: 190 ரன்களை எட்டிய மும்பை!
மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 190 ரன்கள் சேர்த்தது.
MI vs SRH LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!
15 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்துள்ளது.