MI vs GT IPL 2023 Playing XI: குஜராத்துக்கு பதிலடி கொடுக்க இவங்க போதும்.. இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் இதோ..!
MI vs GT IPL 2023 Playing XI: மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
MI vs GT IPL 2023 Playing XI: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேருக்கு நேர் மோதுகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்துள்ளார்.
நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், இன்றைய போட்டியில் வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தும் நோக்கிலும் மும்பை அணி களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குஜராத் அணியும் தீவிரம் காட்டி வருகிறது.
நேருக்கு நேர்:
குஜராத் அணி கடந்தாண்டு தான் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான நிலையில், மும்பை அணியுடன் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளது. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில், நடப்பு தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்றாவது முறையாக இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
வான்கடே மைதான புள்ளி விவரங்கள்
வான்கடே மைதானத்தில் மும்பை அணி இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 47 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மும்பை அணி மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. வான்கடே மைதானத்தில் நடப்பு தொடரில் 5 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் 4 முறை வெற்றி பெற்றுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், விஷ்ணு வினோத், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா
மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
மத்வால், ராமன்தீப், ப்ரீவிஸ், வாரியர், ஷோக்கீன்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்:
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், மோகித் சர்மா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், நூர் அகமது
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
சுதர்சன், கேஎஸ் பாரத், சிவம் மாவி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்