MI vs CSK: பவுலிங்கில் கலக்கிய பும்ரா.... ஓரளவு காப்பாற்றிய துபே-ஜடேஜா! மும்பையை கட்டுப்படுத்துமா சிஎஸ்கே?
MI vs CSK: சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. ஜடேஜா 53 ரன்களுடனும் ஓவர்டன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன, இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ரச்சின் ஏமாற்றம்- மாத்ரே அதிரடி:
சிஎஸ்கேவுக்கு தொடக்கம் நல்லப்படியாக அமையவில்லை, தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திர 5 ரன்களுக்கு வெளியேற இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினார், ஆயுஷ் மாத்ரே அஸ்வினி குமார், பவுண்டரி அடிக்க, அதே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பார்க்கவிட்டு சென்னை அணிக்கு நல்ல பவர்பிளேவை கொடுத்தார். சென்னை அணி பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.
மிடில் ஓவர் சறுக்கல்:
அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய ஷேக் ரசீத் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அடுத்ததாக ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார், ஆனால் சாண்ட்னர், வில் ஜாக்ஸ் சிஎஸ்கேவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்த சென்னை அணி தடுமாற்றத்துடன் விளையாடியது. 7 ஓவர் முதல் 11 ஒவரை ஒரு பவுண்டரி கூட சென்னை அணி அடிக்கவில்லை.
திடீர் அதிரடி:
ஸ்பின்னர்கள் ஓவர்களை கடந்த பின்னர் மீண்டும் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் அதிரடிக்காட்ட தொடங்கினர், 19 பந்துகளில் 16 ரன்கள் என தடுமாறிக்கொண்டிருந்த ஷிவம் அஸ்வினி குமார் ஓவரை பிரித்தெடுத்து 30 பந்துகளில் அரைசதம் அடித்தார், 14 போட்டிகளுக்கு ஷிவம் துபே சென்னை அணிக்காக அடித்த அரைசதம் இதுவாகும், ஜடேஜாவும் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடி அரை அடித்தார்.
177 இலக்கு:
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தோனி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார், இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. ஜடேஜா 53 ரன்களுடனும் ஓவர்டன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தார். 177 ரன்களை துரத்தி மும்பை தற்போது விளையாடி வருகிறது.





















