மேலும் அறிய

MI vs CSK, IPL 2023: வாங்கியதை திருப்பி கொடுக்குமா மும்பை?.. டாஸ் வென்ற சென்னை முதலில் பீல்டிங்

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை - மும்பை மோதல்

ஐபிஎல் 16வது சீசன் 49வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில்  உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில், டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில்  இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த158 ரன்கள் இலக்கை, 18.1 ஓவர்களில் துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை அணி இன்று களமிறங்குகிறது. அதோடு, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியலில் சென்னை & மும்பை அணிகள்:

நடப்பு தொடரில் சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டி மழையால் டிராவும் ஆனது. இதனால் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், மும்பை அணியோ 9 போட்டிகளில் விளையாடி  5 போட்டிகளில் வெற்றியையும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதனால், 10 புள்ளிகள் உடன் மும்பை அணி 6வது இடத்தில் நீடிக்கிறது.  

சென்னை & மும்பை அணி நிலவரம்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான முந்தைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சென்னை அணி இந்த போட்டியில் மீண்டும் எழும் என்ற நம்பிக்கையில் உள்ளது.  அதேநேரம்,  தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மும்பை, கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்தனர். தொடர்ந்து, இன்றைய போட்டியில் வென்று ஹார்டிக் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 15 முறையும் வெற்றி கண்டுள்ளது.  சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 3 முறை வெற்றிபெற்றுள்ளது.   அதேநேரம், சென்னை சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும், ஆதிக்கம்  செலுத்துவது என்னமோ, மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை இந்த மைதானத்தில்  இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில் 5 முறை மும்பை அணியும், 2 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget