LSG Vs RCB, IPL 2022 LIVE: 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய ஆர்சிபி அணி !
LSG Vs RCB, IPL 2022 LIVE: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !
LIVE

Background
15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்த தொடரில் இரு அணிகளும் பலம் மிகுந்த அணியாகவே வலம் வருகின்றன.
ஐ.பி.எல். தொடருக்கு அறிமுக அணியாக லக்னோ அணி இருந்தாலும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை அளிக்கும். கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் லக்னோ அணியின் பேட்டிங்கிற்கு மிகுந்த பக்கபலமாக உள்ளார். குயின்டின் டி காக்கும் தொடக்க வீரராக அசத்த உள்ளார்.
மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, தீபக்ஹூடா பேட்டிங்கில் அசத்தினால் மிகப்பெரிய ஸ்கோரை லக்னோ குவிக்கலாம். இளம் வீரர் ஆயுஷ் பதோனியும் பேட்டிங்கில் அசத்துவார் என்று நம்பப்படுகிறது. கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளார். இவர்களுடன் ஆல்ரவுண்டராக ஜேசன் ஹோல்டரும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர். பந்துவீச்சில் ஆவேஷ்கான், ரவிபிஷ்னோய் சிறப்பாக வீசினால் பெங்களூர் ரன் குவிக்க சிரமம் ஏற்படும்.
பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக ஆடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் பெங்களூர் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அந்த அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான பாப் டுப்ளிசிஸ் விளாசினால் பெங்களூர் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறும். அவருக்கு இளம் வீரர் அனுஜ் ராவத் தொடக்கத்தில் அசத்துவார் என்று நம்பலாம். விராட் கோலியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
LSG Vs RCB, IPL 2022 LIVE: லக்னோ அணியை வீழ்த்திய ஆர்சிபி !
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது.
LSG Vs RCB, IPL 2022 LIVE: 10 ஓவர்களின் முடிவில் லக்னோ 85/3
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
LSG Vs RCB, IPL 2022 LIVE: 30 ரன்களில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல் !
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
LSG Vs RCB, IPL 2022 LIVE: 6 ஓவர்களின் முடிவில் லக்னோ 44/2
6 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
LSG Vs RCB, IPL 2022 LIVE: 6 ரன்களில் ஆட்டமிழந்த பாண்டே
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களில் லக்னோ வீரர் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

