மேலும் அறிய

LSG vs PBKS Match Highlights: பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி!

LSG vs PBKS IPL 2024 Match Highlights: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

200 ரன்கள் இலக்கு

வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. லக்னோ அணியின் கேப்டனாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் செயல்பட்டார். அதேபோல் லக்னோ அணி சார்பில் தமிழ்நாட்டினை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 54 ரன்களும், கேப்டன் பூரான் 42 ரன்களும், இறுதியில் அதிரடியாக ஆடிய க்ருனால் பாண்டியா 43 ரன்களும் குவித்திருந்தனர். 

அட்டகாசமான தொடக்கம்

அதன் பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல் கேப்டன் ஷிகர் தவானும், ஜானி பேரிஸ்டோவும் தொடங்கினர். இவர்கள் இருவரும் பஞ்சாப் அணிக்கு ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தருவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கும்போது, இருவரும் 10 ஓவர்கள் வரை விக்கெட்டினை இழக்காமல் 98 ரன்கள் குவித்தனர். போட்டியின் 12வது ஓவரின் நான்காவது பந்தில் ஜானி பேரிஸ்டோவ் தனது விக்கெட்டினை 29 பந்தில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டினை 19 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டினையும் மயங்க் யாதவ் கைப்பற்றினார். 

லக்னோ வசம் வந்த ஆட்டம்

அதன் பின்னர் வந்த ஜிதேஷ் சர்மாவும் மயங்க் யாதவின் வேகத்தில் தனது விக்கெட்டினை இழக்க, போட்டியில் சுவாரஸ்யம் கூடியது. பஞ்சாப் அணிக்கு 26 பந்தில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு லக்னோ அணியால் தள்ளப்பட்டது. இதையடுத்து மோசின் கான் வீசிய போட்டியின் 17வது ஓவரில் பொறுப்பாக விளையாடி  70 ரன்கள் குவித்த ஷிகர் தவானையும், அடுத்த பந்தில் சாம் கரனையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் போட்டியில் லக்னோவின் கரங்கள் உயர்ந்தது. 

கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. அதாவது ஓவருக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் லிவிங்ஸ்டனும் ஷஷாங்க் சிங்கும் இருந்தனர்.  இறுதியில் பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget