LSG vs GT Innings Highlights: அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
ஐ.பி.எல் சீசன் 17ன் 21 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 7) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் போட்டி இரவு 7.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
அரைசதம் விளாசிய ஸ்டோனிஸ்:
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். இதனிடையே அந்த ஓவரிலேயே உமேஷ் யாதவிடம் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்தார் கேப்டன் கே.எல்.ராகுல். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்த தேவ்துட் படிக்கல் 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் கே.எல்.ராகுல் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் ஓரளவிற்கு பொறுமையாக விளையாடி அணிக்கு ரன்களை பெற்றுக்கொடுத்தனர்.
Marcus Stoinis walked in at 18-2 and did this 🙌💙 pic.twitter.com/Iu5PG7gFEy
— Lucknow Super Giants (@LucknowIPL) April 7, 2024
இதனிடையே கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் 31 பந்துகள் களத்தில் நின்ற கே.எல்.ராகுல் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டோனிஸ் அரைசதம் விளாசினார். மொத்தம் 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்கள் எடுதார். பின்னர் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். இதில் படோனி 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 163 ரன்கள் எடுத்தது. தற்போது 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.