LSG vs DC Live : பரபரப்பான ஆட்டத்தில் பதோனி அதிரடியால் லக்னோ திரில் வெற்றி...!
Lucknow Super Gaints vs Delhi Capitals : டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் 15வது ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 போட்டிகளில் ஆடி 2 போட்டியில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியுடனும் உள்ளன. புள்ளிப்பட்டியலில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 2 போட்டியில் ஆடி 1ல் வெற்றி, 1ல் தோல்வியுடன் உள்ளன. இரு அணிகளும் தங்களது அடுத்த வெற்றிக்காக இன்று களமிறங்குகின்றன.
11 பந்துகளில் 18 ரன்கள்...! உச்சகட்ட பரபரப்பில் ரசிகர்கள்...!
17வது ஓவரை முஸ்தபிஷிரும், 18வது ஓவரை ஷர்துல் தாக்கூரும் கட்டுக்கோப்பாக வீசியதால் லக்னோவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்படுகிறது.
அடுத்தடுத்து பீமர்கள்...! பாதியிலே ஓவரை நிறுத்திய நோர்ட்ஜே..!
டெல்லி பிரதான பந்துவீச்சாளர் நோர்ட்ஜே அடுத்தடுத்து பீமர் பந்து வீசியதால் அவரது ஓவர் பாதியிலே நிறுத்தப்பட்டது.




















