IPL 2023: அரையிறுதி தோல்வி எதிரொலி... கேன் வில்லியம்சனுக்கு மேலும் ஒரு அடி... SRH அணியிலிருந்து விடுவிப்பா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டித் தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல். திகழ்கிறது. டி20 போட்டித் திருவிழாவான இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் நடப்பாண்டில் 10 அணிகள் களமிறங்கின. அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், 2023ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. குட்டி ஏலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் எந்தெந்த அணியினர் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களை தக்க வைக்கிறார்களோ, அவர்கள் தவிர அந்த அணியினரால் விடுவிக்கப்பட்ட வீரர்களை வைத்து ஏலம் நடத்தப்படும்.
ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் யார்? யார்? எனும் பட்டியலை வரும் 16-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதனால், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஐபிஎல் 2023 தொடருக்கான மிகப்பெரிய ஏலம் வருகிற 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஐபிஎல் தொடரில் விளையாடிய ஹைதராபாத் அணி மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இதன்மூலம் பத்து அணிகளின் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு மட்டுமே ஹைதராபாத் அணியால் வர முடிந்தது.
இந்த தோல்விக்கு மிக முக்கியமானதாக கேன் வில்லியம்சனின் கேப்டன்சி தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், 10.75 கோடி ரூபாய்க்கு வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் மற்றும் 7.75 கோடி ரூபாய்க்கு ரோமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் ஹைதரபாத் அணியால் கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. எனவே இவர்களும் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சனின் தலைமையிலான நியூசிலாந்து அணி தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாகவே கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டனாக கேன் வில்லியம்சன் - உலகக் கோப்பை:
- 2016: டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி
- 2019: 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி தோல்வி
- 2021: டி20 உலகக் கோப்பை இறுதி தோல்வி
- 2022: டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி
IPL 2022 ஏலம்: SRH வெளியிடப்பட்ட வீரர்கள்:
- அப்துல் சமத்
- ஜே. சுசித்
- ஷஷாங்க் சிங்
- க்ளென் பிலிப்ஸ்
- ரொமாரியோ ஷெப்பர்ட்
IPL 2022 ஏலம்: SRH தக்கவைத்த வீரர்கள்:
- அபிஷேக் சர்மா
- ராகுல் திரிபாதி
- உம்ரான் மாலிக்
- ஐடன் மார்க்ராம்
- கேன் வில்லியம்சன்
முன்னதாக, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக லாரா நியமிக்கப்பட்டார்.