Virat Kohli: எதுவுமே வேண்டாம்... ஆசை ஆசையாக வாங்கிய கார்களை எல்லாம் விற்றுவிட்டேன் - மனம் திறந்த விராட் கோலி..!
எனது கார்களை விற்க இதுதான் காரணம் என பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
எனது கார்களை விற்க இதுதான் காரணம் என பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டித்தொடரின் 16வது சீசன் நாளை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களிடம் பல்வேறு சுவாரஸ்மான கேள்விகளைக் கேட்டு, அதற்கு வீரர்கள் தெரிவிக்கும் பதில்களை அணியின் சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில், பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, இதுவரை கூறாத பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
அதில், “ எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது கார்களை அதிகம் வாங்கிக் குவிக்கும் பழக்கம். எங்காவது செல்லும் போது ஏதாவது காரைப் பார்த்தால் அது எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டால் அந்த காரை வாங்கிடுவேன். இதனால் எக்கச்சக்க கார்களை வாங்கி குவித்தேன். ஆனால், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு நான் என்ன செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். இவ்வளவு கார்கள் எனக்கு தேவையற்றது என்பதை புரிந்து கொண்டேன். மேலும், நான் விற்ற கார்களை எனக்கு ஓட்ட மிகவும் சிரமாக இருந்தது. மேலும், அவற்றை பயன்படுத்த போதுமான நேரம் இல்லை. இதனால் விற்று விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அந்த பேட்டியில், “என்னை கிரிக்கெட் நோக்கி ஈர்த்தவர்கள் என்றால், அது, சச்சின் தெண்டுல்கர் மற்றும் சர்.வி. ரிச்சர்ட்ஸ் தான். இவர்களின் போட்டிகள் தான் என்னை கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தினை தூண்டியது. இவர்கள் இருவரும் தங்களது காலத்தில், அவர்களின் ஆட்ட நுணுக்கத்தால் கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியவர்கள். குறிப்பாக பேட்டிங்கில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்” என்றார்.
மேலும், விராட்கோலிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோருடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசுவீர்கள் என கேட்டதற்கு, “ அப்போது நான் எதுவும் பேசாமல் அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு இருப்பேன். அவர்கள் பேசும் போது என்னிடம் வார்த்தைகள் இருக்காது. விளையாட்டு உலகின் இரு பெரும் ஜாம்பவான்கள் பேசும் போது வேறு என்ன செய்யமுடியும்” என கூறியுள்ளார்.
விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை
ரன் மிஷின் எனப்படும் விராட் கோலி இதுவரை 5 சதங்களை விளாசியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தினை விளாசியிருந்தார். அதன் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஒரு சதம் கூட அவர் விளாசவில்லை. அதின் பின்னர், 2019ஆம் ஆண்டு சீசனில் மட்டும் 4 சதங்களை பறக்கவிட்டு இருந்தார். மொத்தம் ஐந்து சதங்களை விளாசியுள்ளா விராட் இம்முறை தனது நண்பரான கெயில் சாதனையுடன் சமன் செய்வார் அல்லது அவரை விட கூடுதலாகவும் சதம் விளாச வாய்ப்புகள் உள்ளது. கெயில் 6 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.