IPL2023 RR vs LSG 1st Innings Highlights: இறுதியில் விக்கெட்டுகளை இழந்த லக்னோ; பந்து வீச்சில் அசத்திய ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் இலக்கு..!
IPL2023 RR vs LSG 1st Innings Highlights: லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.
16வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச முடிவு செய்தார். போட்டி நடைபெற்ற சாவாய் மான்சிங் மைதானத்தில் பேட்டிங் சவாலாக இருக்கும் என்பதால், முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இந்த முடிவு மிகச்சரியானது என்றாலும் கூட லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கெயில் மேயர்ஸ் மற்றும் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்தும் ட்ரெண்ட் போல்ட் வீசிய மூன்று ஓவர்களையும் மிகச் சிறப்பாக எதிர் கொண்டனர். இதனால் பவர்ப்ளேவில் மட்டுமல்ல முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணியால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை.
பவர்ப்ளேவை மிகவும் நிதானமாக கையாண்ட லக்னோ அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் பவுண்டரிகளை விளாச தொடங்கிய லக்னோ அணி , சஹால் வீசிய 9 ஓவரில் மேயர்ஸ் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, ராகுல் ஒரு சிக்ஸர் விளாசினார். இந்த சிக்ஸர் 103 மீட்டருக்கு விரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அதிரடிக்கு கியரை மாற்றிய லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் 79 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் வந்த ஆயுஷ் பதோனியும் தனது விக்கெட்டை இழக்க போட்டி ராஜஸ்தான் கைகளுக்குள் போவது போல் தெரிந்தது. ஆனால் சஹால் வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட மேயர்ஸ் 40 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார். ஆனால் அவர் அஸ்வின் வீசிய 14வது ஓவரில்ன் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதே ஓவரில் மேயர்ஸ்க்கு முன தீபக் ஹூடா தனது விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் 14 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின்னர் கைகோர்த்த நிக்கோலஸ் பூரான் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னஸ் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். 19வது ஓவரில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசிய இவர்கள் இருவரும் 20 ஓவரில் தங்களது விக்கெட்டை இழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது. அதிகபடசமாக கேயல் மேயர்ஸ் 51 ரன்களும், கே.எல். ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் அஸ்வின் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.