IPL2023 LSG vs GT 1st Innings Highlights: பலமான குஜராத்தை சுழலில் சுத்து போட்ட லக்னோவுக்கு 136 ரன்கள் இலக்கு..!
IPL2023 LSG vs GT 1st Innings Highlights: தொடக்கம் முதல்ன் நிதானமாக ஆடிய குஜராத் அணி லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
IPL2023 LSG vs GT 1st Innings Highlights: நடப்புச் சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரில் குஜராத் அணியின் சுப்மன் கில் குர்னல் பாண்டியா பந்து வீச்சில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் தடுமாறினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் சஹா அதிரடியாக ஆடினார். பவர்ப்ளே முடிவில் 40 ரன்கள் எடுத்த குஜராத் அணி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியபடி நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது. குஜராத் அணியின் முதல் சிக்ஸர் 9வது ஓவரின் இறுதியில் தான் வந்தது.
சிறப்பாக விளையாடி வந்த சஹா 37 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் குர்னல் பாண்டியா பந்து வீச்சில் வெளியேறினார். தனது அனுபவன் ஆட்டத்தால் லக்னோவுக்கு சவால் அளித்த அவர் தனது அரை சதத்தினை நழுவவிட்டார். அதன் பின்னர் வந்த அபினவ் மற்றும் விஜய் சங்கர் சொதப்பினர். இதனால் குஜராத் அணி 15 ஓவக்ரள் முடிவில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
சுழற்பந்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் சூதானமாக ரன்கள் சேர்த்து வந்த ஹர்திக் பாண்டியாவுடன் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் கைகோர்த்தார். இருவரும் அதன் பின்னர் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் மேலும் நிதானமாக ஆடினர். அதன்18 ஓவரில் ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் ஆவர் 44 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார். ஆனால் 19வது ஓவரில் பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
இறுதில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி சார்பில் சாஹா 47 ரன்களும் ஹர்திக் பாண்டியா 66 ரன்களும் சேர்த்தனர். லக்னோ அணி சார்பில் குர்னல் பாண்டியா மற்றும் ஸ்டாய்னஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா மற்றும் நவீன் உல்-ஹாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் லக்னோ அணி குஜராத் அணியை வீழ்த்தினால் 10 புள்ளிகளுடன் புள்ளிப்படியலில் முதல் இடத்துக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.