(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Ticket Sale : 10-ஆம் தேதி சென்னை - டெல்லி மேட்ச்.. சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை
வரும் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
வரும் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் வரும் 10-ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், pay tm மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலையுள்ள டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வாங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணி ஐந்தாவது இடத்திலும். மும்பை இண்டியன்ஸ் ஆறாவது இடத்திலும் உள்ளன.
வரும் 10-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். காரணம் கடந்த 6-ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும்- ராயல் சேலஞ்சஸ் பெங்களுரு அணியும் மோதின. இதில் டெல்லி கேப்பிட்டஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால் 5-வது இடத்தில் உள்ள பெங்களுரு அணி வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் செமி பைனஸ்க்கு செல்ல இது உதவியாக இருந்திருக்கும், 10-வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டஸ் அணி வெற்றி பெற்றதில் எந்த பயனும் இல்லை என்று பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பரபரப்பாக விளையாடி டெல்லி அணி ரன்களை குவித்தது தான். இந்நிலையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஒரு வேளை டெல்லி அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்ற எதிர்ப்புடன் சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.