IPL 2022: சூதாட்ட புகாரால் சிக்கலில் புது ஐபிஎல் அணி.... அதானிக்கு கை மாற வாய்ப்பு?
சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் சி.வி.சி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டால், ஏலத்தின்போது மூன்றாம் இடம் பிடித்த அதானி அமைப்பிற்கு புதிய அணி ஒதுக்கப்படாலம் என தெரிகிறது.
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிய இரண்டு அணிகளை முடிவு செய்வதற்கான ஏலத்தில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய இரண்டு நகரங்களை மையமாக கொண்டு புதிய அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட அணியை சி.வி.சி. கேப்பிடல் நிறுவனமும், லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன.
அகமதபாத் அணி - சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் - 5635 கோடி ரூபாய்
சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் விளையாட்டு துறையில் அறிமுகமாவது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஃபார்முலா ஒன் தொடர் விளையாட்டில் பங்குகளை கொண்டுள்ளது. இப்போது ஐபிஎல் அணியை ஏலம் எடுத்தது. இந்நிலையில், சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் சூதாட்டம் நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்கை பெட்டிங் அண்ட் கேமிங் எனப்படும் ப்ரிட்டனைச் சேர்ந்த சூதாட்ட நிறுவனத்தின் 80% பங்குகளை சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால், சி.வி.சி நிறுவனத்தில் பங்குகளை பிசிசிஐ ஆராய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லலித் மோடி ட்வீட்:
i guess betting companies can buy a @ipl team. must be a new rule. apparently one qualified bidder also owns a big betting company. what next 😳😳😳 - does @BCCI not do there homework. what can Anti corruption do in such a case ? #cricket
— Lalit Kumar Modi (@LalitKModi) October 26, 2021
லலித் மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”சூதாட்டத்தில் ஈடுபடும் ஒரு நிறுவனம் எப்படி ஐபிஎல் அணியை வாங்க முடியும். புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது போல. அடுத்து என்ன? பிசிசிஐக்கு இது குறித்து ஆராய்ச்சி செய்யவில்லை” என தெரிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ தரப்பில் வெளியாகியுள்ள தகவலில், நியாயமான முறையில்தான் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது எனவும், சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிவிசி கேப்பிடல் நிறுவனத்தின் முதலீடு குறித்த விவரங்களை ஆராய்ந்து பிசிசிஐ முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் சி.வி.சி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டால், ஏலத்தின்போது மூன்றாம் இடம் பிடித்த அதானி அமைப்பிற்கு புதிய அணி ஒதுக்கபடாலம் என தெரிகிறது.
ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய கண்டங்களில் தனது பிஸினஸை விரிவுப்படுத்தி இருக்கும் சி.வி.சி கேப்பிடல் நிறுவனம், உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் உள்ள 73 நிறுவனங்களில் பங்குகளை முதலீடு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட இந்த 73 நிறுவனங்களில் 3,00,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். 1981-ம் ஆண்டு அறிமுகமான சி.வி.சி கேப்பிடல் நிறுவனம் 30 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்