மேலும் அறிய

Vijay Shankar: விஜய் சங்கர் வாழ்வில் விளக்கேற்றுமா CSK? இல்லை பெஞ்சைத் தேய்க்கனுமா?

சி.எஸ்.கே.விற்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள விஜய் சங்கர் வாழ்வில் சென்னை அணி புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பாரப்பு எழுந்துள்ளது.

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் நேற்று சவுதி அரேபியாவில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான வீரர்கள் தங்களுக்கு விருப்பமான அணிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக ஏலத்தில் பல திருப்பங்கள் நிகழ்ந்தது.

சென்னை அணியில் விஜய் சங்கர்:

நேற்றைய ஏலத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில், லக்னோ அணி ஆதிக்கம் செலுத்தியது. ரிஷப்பண்ட், மில்லர், முகமது ஷமி என முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னைக்காக அஸ்வின் மற்றும் விஜய் சங்கரை ஏலத்தில் எடுத்துள்ளது.

தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள அஸ்வின் ஐ.பி.எல். தொடக்க காலம் முதல் 2015ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உலா வந்தவர். இதில் பலரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்திருப்பது விஜய் சங்கர் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதே ஆகும்.

புதிய திருப்பமா?

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட விஜய் சங்கர் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் ஆவார். சிறந்த ஆல்ரவுண்டரான இவர்  திறமையானவராக இருந்தாலும், இதுவரை இவரது திறமை சர்வதேச அரங்கில் பெரியளவில் வெளிப்படவில்லை. கடந்த சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இவர் களமிறங்கினாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டார்.

விஜய் சங்கரும் ஆரம்ப காலத்தில் சென்னை அணிக்காக ஆடியவர். மற்ற அணிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் கூட சென்னை அணிக்காக ஆடிய பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்குவார்கள். அந்த வகையில், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள விஜய் சங்கர் வாழ்வில் சி.எஸ்.கே. புதிய திருப்பத்தை தருமா? இல்லையா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விமர்சனத்திற்கு பதிலடி தருவாரா?

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டபோது, அவரை 3 டி பிளேயர் என்பதாலே அம்பத்தி ராயுடுவிற்கு பதில் தேர்வு செய்ததாக தேர்வுக்குழு விளக்கம் அளித்தபோது பலரும் அதை விமர்சித்தனர். அம்பத்தி ராயுடுவே அதை விமர்சித்தார். அந்த உலகக்கோப்பையில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த நிலையில், அம்பத்தி ராயுடு ஆடிய அதே சி.எஸ்.கே. அணிக்காக தற்போது விஜய் சங்கர் ஆட இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சங்கர் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் ஆடி 223 ரன்களும், 9 டி20 போட்டிகளில் ஆடி 43 ரன்களும், 72 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1115 ரன்களும் அடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் 6 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐ.பி.எல். தொடரில் 9 விக்கெட்டுகளும், டி20யில் 5 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீரராக விஜய் சங்கர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெஞ்சில் உட்கார வைக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தற்போது அஸ்வின், விஜய் சங்கர் ஆகிய இருவரை தேர்வு செய்துள்ளனர். அதேசமயம், சென்னை அணி நிர்வாகம் பெரும்பாலும் பிரபலம் இல்லாத இந்திய வீரர்களை பெஞ்சிலே பல சீசன்களாக உட்கார வைக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அந்த வகையில் 33 வயதான விஜய் சங்கரையும் சிஎஸ்கே பெஞ்சிலே உட்கார வைத்துவிடுமோ? என்ற கேள்வியும் ஒரு புறம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் சங்கர் உள்ளார். 2014ம் ஆண்டு முதல் ஐபிஎல் ஆடி வரும் விஜய் சங்கர் சென்னை அணிக்காக மட்டுமின்றி டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஹைதரபாத்  ஆகிய அணிகளுக்காகவும் இதற்கு முன்பு ஆடியுள்ளார். தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Budget 2025 LIVE: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! ரூபாய் 62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
Budget 2025 LIVE: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! ரூபாய் 62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Budget 2025 LIVE: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! ரூபாய் 62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
Budget 2025 LIVE: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! ரூபாய் 62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Watch Video:  3 நாட்களில் இரண்டாவது விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் கொடூர காட்சிகள் - வீடியோ வைரல்
Watch Video: 3 நாட்களில் இரண்டாவது விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் கொடூர காட்சிகள் - வீடியோ வைரல்
Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
IND vs ENG: ஏமாத்தி ஜெயிச்சதா இந்தியா? துபேவிற்கு பதில் ராணா! விதிகள் சொல்வது என்ன?
IND vs ENG: ஏமாத்தி ஜெயிச்சதா இந்தியா? துபேவிற்கு பதில் ராணா! விதிகள் சொல்வது என்ன?
Embed widget