மேலும் அறிய

IPL Auction 2024: ஐபிஎல் மினி ஏல கோதாவில் களமிறங்கும் 10 அணிகள்; எகிறப்போகும் வீரர்களின் விலை..! முழு விபரம்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் ஆவார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 மினி ஏலம் நாளை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. பத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியை பலமான அணியாக மாற்ற தயாராகி வருகின்றனர். ஏலம் எப்போது, ​​எங்கு நடக்கின்றது என்பதையும்,  எப்படி நேரடியாக ஏலத்தினை பார்க்க முடியும் என்ற முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது?

ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை துபாயில் கோகோ கோலா அரங்கில் நடைபெறும். நிகழ்ச்சி இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு தொடங்கவுள்ளது

2024 ஐபிஎல் ஏலத்தைப் பார்ப்பது எப்படி?

ஐபிஎல் 2024 ஏலம் டிவி பார்வையாளர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.  டிஜிட்டல் முறையில் ஏலத்தினை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் காணலாம்.

ஐபிஎல் 2024 ஏலத்தில் எத்தனை வீரர்கள் உள்ளார்கள்?

ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் களமிறங்கவுள்ளனர். இதில் அதிகபட்சமாக  77 வீரர்களை மட்டும்தான் மொத்தமாக உள்ள 10 அணி உரிமையாளர்களால் ஏலம் கூறமுடியும். மொத்தம் ஏலம் கூறப்படவுள்ள 77 வீரர்களில் 30 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தமாக மொத்தம் களமிறங்கவுள்ள 333 வீரர்களில்  214 இந்திய வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவர் உட்பட 119 வெளிநாட்டு வீரர்கள். அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவருடன் 116 கேப்டு பிளேயர்களும், 215 அன் கேப் பிளேயர்களும் உள்ளனர்.

2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏலதாரர் யார்?

துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 ஏலத்திற்கான ஏலத்தில் மல்லிகா சாகர் இருப்பார்.

2024 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பணம் உள்ளது?

குஜராத் டைட்டன்ஸ் (ரூ 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ. 14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).

2024 ஐபிஎல் ஏலத்தில் இளைய மற்றும் வயதான வீரர்கள் யார்?

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் ஆவார்.

ஆப்கானிஸ்தானின் 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் மிகவும் வயதான வீரர் ஆவார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் யாருக்கெல்லாம் குறி வைக்க வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது ரூ. 31.4 கோடி உள்ளது. சென்னை அணி ஷர்துல் தாக்கூர், மணீஷ் பாண்டே, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை வாங்க ஆர்வம் காட்டலாம். குறிப்பாக ஷர்துல் தாக்குர் இதற்கு முன்பு சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய அனுபவம் உள்ளவர். இவருக்காக சென்னை அணி ரூபாய் 10 கோடி வரை செலவு செய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சீசனில் கோப்பையை வென்ற கையுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த அம்பாத்தி ராயுடுவின் இடத்தினை நிரப்ப சென்னை அணி இந்திய வீரரை தேர்வு செய்ய நினைத்தால், அவர்களின் தேர்வாக மணீஷ் பாண்டே இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பந்து வீச்சினை இன்னும் பலப்படுத்த நினைத்தால் பெங்களூரு அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஜோஷ் ஹோசில்வுட்டை வாங்க சென்னை அணி வாங்க ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
Embed widget