IPL Auction 2022 Day 2 LIVE: அர்ஜுன் டெண்டுல்கரை அரவணைத்த மும்பை...
IPL 2022 Mega Auction Day 2 LIVE Updates:ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் இரண்டாவது நாள் இன்று.. தகவல்கள் உடனுக்குடன்..

Background
IPL Auction 2022 Day 2 LIVE Updates
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹர், 14 கோடி ரூபாய்க்கு மீண்டும் அதே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிடும் சென்னை அணி, தீபக் சாஹரை எடுக்கும் எடுத்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது. ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பின் போது சென்னை அணியில் ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கபட்டார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 12 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி மெண்டராக விளையாடி ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்று சிலர் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை தற்போது கேப்டனாக்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL Auction 2022 Day 2 LIVE: அர்ஜுன் டெண்டுல்கரை அரவணைத்த மும்பை...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
IPL Auction 2022 Day 2 LIVE: சென்னை அணிக்கு வந்தார் கிறிஸ் ஜார்டன்...
இங்கிலாந்து அணியின் ஆல் - ரவுண்டர் கிறிஸ் ஜார்டனை 3.6 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.




















