IPL Auction 2022 : ஐ.பி.எல். ஏலத்தில் மயங்கி விழுந்த ஹ்யூக் எட்மிட்ஸ்.. யார் இவர்?
ஐ.பி.எல். ஏலத்தை நடத்தி வந்த ஹூயூக் எட்மிட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
2022ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க உள்ள 10 அணிகளுக்கான புதிய வீரர்கள் யார்? யார்? என்பதற்கான ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தை தொகுத்து வழங்கி வந்த ஹூயூக் எட்மிட்ஸ் ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வரும் ஹூயூக் ஆடம்ஸ் ஏலத்தை நடத்துவதில் மிகவும் புகழ் பெற்றவர். இவர் கடந்த 2018ம் ஆண்டு பி.சி.சி.ஐ.யால் ஐ.பி.எல். ஏலத்தை தொகுத்து வழங்குவதற்காக நியமிக்கப்பட்டார். இவருக்கு முன்பு ரிச்சர்ட் மேட்லி என்பவர் பணியாற்றி வந்தார்.
ஏல உலகில் மிகவும் புகழ்பெற்ற ஹூயூக் எட்மிட்ஸ், 36 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுக்காக ஏலத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இவர் இதுவரை உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 500 ஏலத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் ஏலம் மட்டுமின்றி கலைப்பொருட்கள் ஏலமும் நடத்தியுள்ளார். சர்வதேச அளவில் கலைப்பொருட்கள், பழமையான கார் மற்றும் பல பொருட்களை ஏலத்தில் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஏலத்தின் மதிப்பு மட்டும் 2.7 பில்லியன் ஆகும்.
2004ம் ஆண்டு எரிக் கிளாப்டனுக்கு சொந்தமான 88 கிடார்களை ஏலத்தில் விடுத்தார். இந்த 88 கிடார்களை மொத்தமாக 74 லட்சத்து 38 ஆயிரத்து 294 டாலருக்கு விற்பனை செய்து நிதி திரட்டினார். 2016ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெக் பயன்படுத்திய ஆஸ்டன் மார்டின் டிபி 10 என்ற காரை 24 லட்சத்து 34 ஆயிரத்து 500 டாலருக்கு விற்பனை செய்தார்.
2008ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஏலத்தையும் இவர்தான் நடத்தியுள்ளார். உலகம் முழுவதும் 850 தொண்டு நிறுவனங்களுக்காக 30 நகரங்களில் ஏலத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். தற்போது, மருத்துவக்குழு சிகிச்சை அளித்தத பிறகு ஹியூக் எட்மிட்ஸ் நலமாக உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்