மேலும் அறிய

RCB: சாம்பியன் ஆர்சிபி! 18 ஆண்டுகளின் வெற்றி, தோல்வி வரலாறு! இதுவரை எத்தனை கேப்டன்கள்?

RCB: நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் முதன்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியுடன் பெற்ற வெற்றி, தோல்வியை கீழே காணலாம்.

19வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி-யும், முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன.

சாம்பியன் ஆர்சிபி:

ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தொடரின்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி ஆர்சிபி. கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை ஒரு கோப்பையைக்கூட வெல்லாத அணி என்ற ஏளனத்துடன் தொடரை தொடங்கிய ஆர்சிபி அணி கோப்பையை வென்று வரலாறு படைத்தது. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ஆர்சிபி அணி கடந்த 18 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியுடனும் ஆடிய போட்டிகள், பெற்ற வெற்றிகள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

   மோதிய அணிகள் போட்டிகள்             வெற்றி           தோல்வி        முடிவு    இல்லாதது
சென்னை 35 13 21       1
டெல்லி 33 20 12   1
குஜராத் 6 3 3 0
கொல்கத்தா 35 15 20 0
லக்னோ 6 4 2 0
மும்பை 34 15 19 0
பஞ்சாப் 37 19 18 0
ராஜஸ்தான் 33 17 14 2
ஹைதரபாத் 25 11 14 0

விராட் கோலி எனும் பலம்:

விராட் கோலி அந்த அணியின் ஆஸ்தான நட்சத்திர வீரராக உள்ளார். 18 ஆண்டுகாலமாக அந்த அணிக்காக அவர் ஆடி வருகிறார். கிறிஸ் கெயில், டிவிலியர்ஸ், தினேஷ் கார்த்திக் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இன்றும் ஆர்சிபி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் பல போட்டிகளில் ஆர்சிபியை வெற்றிபெற வைத்துள்ளனர்.

ஆர்சிபி கேப்டன்கள்:

ஆர்சிபி அணிக்கு ராகுல் டிராவிட் முதன்முறையாக கேப்டனாக பொறுப்பு வகித்தார். பின்னர், பீட்டர்சன், கும்ப்ளே, வெட்டோரி, வாட்சன் ஆகியோர் கேப்டன்சி வகித்தனர். விராட் கோலி ஆர்சிபி அணிக்காக அதிக போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். அவர் 143 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பு வகித்தார். விராட் கோலிக்கு பிறகு டுப்ளிசிஸ் கேப்டன் பொறுப்பை வகித்தார். 

கடந்த சீசனில் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் ஆடாத ரஜத் படிதார் அணியை வழிநடத்தினார். அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் கேலி செய்த சூழலில், ஆர்சிபி அணிக்காக முதன்முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். ஜிதேஷ் சர்மாவும் கடந்த சீசனில் 2 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார்.  இன்று பல அணியில் நட்சத்திர வீரர்களாக உள்ள கே.எல்.ராகுல், டிராவிஸ் ஹெட், ஷிவம் துபே, முகமது சிராஜ், சாஹல் போன்ற பல வீரர்கள் ஆர்சிபிக்காக ஆடியவர்கள். 

அணி விவரம்:

இந்த சீசனில் ஆர்சிபி அணி பலமான அணியாகவே களமிறங்கியுள்ளது. அணி விவரம்: ரஜத் படிதார் ( கேப்டன்), தேவ்தத் படிக்கல், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோர்டன் காக்ஸ், குருணல் பாண்ட்யா, சுவப்னில் சிங், டிம் டேவிட், ரோமொரியோ ஷெப்பர்ட், வெங்கடேஷ் ஐயர்,சத்விக் தேஷ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ்க் செளகான், ஹேசில்வுட், ரஷிக் தர், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர்குமார், நுவன் துஷாரா, அபினந்தன் சிங், ஜேக்கப் டஃபி, யஷ் தயாள்.

பந்துவீச்சு:

ஆர்சிபி அணி 17 ஆண்டுகளில் பந்துவீச்சில் பலவீனமாக இருந்ததே அவர்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. கடந்த சீசனில் ஹேசில்வுட், புவனேஷ்வர், யஷ் தயாள், குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, ஷெப்பர்ட் பந்துவீச்சில் அசத்தியதே அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
Embed widget