மேலும் அறிய

தோனி ரசிகர்களே! CSK எடுத்துள்ள 4 முக்கிய முடிவுகள் - என்னென்ன தெரியுமா?

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 4 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி ஓய்வு பெறும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 4 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 

அது என்னென்ன முடிவுகள் என்பதை கீழே காணலாம்.

1. தோனி ஆடுவாரா? மாட்டாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. 44 வயதான தோனி இந்த சீசன் ஆடுவாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அணியில் ஏராளமான மாற்றங்கள் செய்துள்ள நிலையில், அவரை இந்த ஐபிஎல் தொடரில் ஆட வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸில் தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே பல ஆயிரங்கள் வரை கொடுத்து டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி மைதானத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது கடைசி ஐபிஎல் என்றும் கூறப்பட்டு வருகிறது.

2. மகளிர் பிரிமீயர் லீக்கில் சிஎஸ்கே:

ஆண்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படுவது போல, பெண்களுக்கு டபுள்யூஎல் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் ஆடும் மும்பை, ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றனர். ஆனால், சிஎஸ்கே அணி சார்பில் மகளிரணி ஆடவில்லை. இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

3. சிஎஸ்கே-விற்கு வேறு ஒரு மைதானம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக சேப்பாக்கம் உள்ளது. நடப்பாண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை மட்டுமின்றி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சி மைதானத்தையும் சொந்த மைதானமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

4. கீப்பராகும் சஞ்சு சாம்சன்:

சென்னை அணிக்காக வரும் சீசன் முதல் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்க உள்ளார். அடிப்படையில் அவரும் விக்கெட் கீப்பர் என்பதால், தோனிக்கு பதிலாக வரும் சீசனில் சில போட்டிகளில் சஞ்சு சாம்சனையும் விக்கெட் கீப்பிங் செய்ய வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தோனி தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியாக சிஎஸ்கே திகழ்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனி மட்டும் ஆடி வருகிறார். அணியில் ஏராளமான இளம் வீரர்களும் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். 

ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய எழுச்சியுடன் வர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget