மேலும் அறிய

IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?

IPL 2025 RCB vs RR: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி விராட் கோலி, படிக்கல் அபாரமான பேட்டிங்கால் 205 ரன்களை எடுத்துள்ளது.

IPL 2025 RCB vs RR:

ஐபிஎல் தொடரில் இன்று சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

கோலி அதிரடி:

இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய பில்சால்ட் - விராட் கோலி ஜோடி அதிரடியாக ஆடியது. வழக்கமாக சால்ட் அதிரடியாக ஆடுவார். ஆனால், இந்த முறை விராட் கோலி அதிரடியாக ஆட சால்ட் நிதானமாக தொடங்கி அதிரடி காட்ட முயற்சித்தார். ஆனால், அதிரடியாக ஆடுவதற்கு முன்பே பில் சால்ட் ஹசரங்கா6 சுழலில் அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கோலி, படிக்கல் அரைசதம்:

இதையடுத்து, ஜோடி சேர்ந்த விராட் கோலி - தேவ்தத் படிக்கல் ஜோடி அசத்தலாக ஆடியது. இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். பவுண்டரி, சிக்ஸர்களாக இருவரும் விளாச பெங்களூர் ஸ்கோர் எகிறியது. விராட் கோலி பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாச படிக்கல்லும் பக்கபலமாக பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அசத்தலாக ஆடிய விராட் கோலி தன்னுடைய  68வது ஐபிஎல் அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல்லும் அரைசதம் விளாசினார்.

206 ரன்கள் டார்கெட்:

இதனால், ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல்ரன் ரேட் இருந்தது. இந்த நிலையில் இந்த ஜோடியை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிரித்தார்.  அவரது வேகத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அரைசதம் விளாசிய படிக்கல்லும் அவுட்டானார். அவர் 27 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 206 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஆடிய 4வது போட்டியில் தற்போதுதான் இயல்பான பேட்டிங்கிற்கு ஆர்சிபி அணி வந்துள்ளது.  

அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் 1 ரன்னில் அவுட்டாக 5வது விக்கெட்டிற்கு டிம் டேவிட் - ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். இதனால், இவர்களது ரன்ரேட் தொடர்ந்து 10க்கும் மேலே இருந்தது.  சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டு்க்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர், ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
Jewelery Loan waiver : நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Embed widget