RCB Vs PBKS: சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி..! நொந்துபோன ஆர்சிபி ரசிகர்கள் - பஞ்சாப் அதிரடி வெற்றி
IPL 2025 RCB Vs PBKS: பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

IPL 2025 RCB Vs PBKS: பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
ஆர்சிபி ஹாட்ரிக் தோல்வி:
பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி, மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும் நேஹல் வதேரா நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார். அதன்படி, இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 19 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். இதன் மூலம் 12.1 ஓவர்கள் முடிவிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் உள்ளூரில் நடப்புதொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்துள்ளது. கொட்டும் மழையிலும் காத்திருந்த ரசிகர்கள், ஆர்சிபி அணி மீண்டும் உள்ளூரில் தோல்வியுற்றதால் கண்கள் கலங்கியபடி மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்:
போட்டியின் முடிவை தொடர்ந்து பஞ்சாப் அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
| அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | ரன்ரேட் | புள்ளிகள் |
| டெல்லி கேபிடல்ஸ் | 6 | 5 | 1 | 0.744 | 10 |
| பஞ்சாப் கிங் | 7 | 5 | 2 | 0.308 | 10 |
| குஜராத் டைட்டன்ஸ் | 6 | 4 | 2 | 1.081 | 8 |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 7 | 4 | 3 | 0.446 | 8 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7 | 4 | 3 | 0.086 | 8 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7 | 3 | 3 | 0.547 | 6 |
| மும்பை இந்தியன்ஸ் | 7 | 3 | 4 | 0.239 | 6 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 7 | 2 | 5 | -0.714 | 4 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7 | 2 | 5 | -1.217 - | 4 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 7 | 2 | 5 | -1.276 - | 4 |




















