IPL 2025 Points Table: ஒரே தோல்வி.. கீழே சறுக்கிய RCB... கொல்கத்தாவை பழிவாங்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..
IPL 2025: குஜராத் அணியுடன் அணியிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு சரிந்தது.

ஐபிஎல் 2025 புள்ளிகள் அட்டவணை: பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 2 (புதன்கிழமை) அன்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 14வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றிப்பெறும் வாய்ப்பை இழந்தது, அதே நேரத்தில் குஜராத அணி முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
RCB சொதப்பல்:
முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்த பிறகு, முகமது சிராஜ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரி அபார பந்துவீச்சால் RCB அணி தடுமாறியது. ஆர்சிபியின் முக்கிய பேட்டர்களான விராட் கோலி (7), பில் சால்ட் (14) மற்றும் ரஜத் படிதார் (12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி 6.2 ஓவர்களில் 42/4 என்ற நிலையில் தடுமாறியது. லியாம் லிவிங்ஸ்டோன் (40 பந்துகளில் 54) மற்றும் ஜிதேஷ் சர்மா (21 பந்துகளில் 33) ஆகியோரின் முக்கியமான பார்ட்னர்ஷிப் இன்னிங்ஸை நிலைநிறுத்தியது, அதே நேரத்தில் டிம் டேவிட்டின் கடைசி நேர கேமியோ (18 பந்துகளில் 32) ஆர்சிபி 20 ஓவர்களில் 169/8 ரன்கள் எடுக்க உதவியது.
குஜராத் வெற்றி:
ஜோஸ் பட்லர் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்ததன் மூலம் குஜராத் அணியிம் வெற்றிக்கு காரணமாக இருந்தார்து. சாய் சுதர்சன் (36 பந்துகளில் 49) ஜோஷ் ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்தா, அதே நேரத்தில் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (18 பந்துகளில் 30*) அடித்து, 17.5 ஓவர்களில் 170/2 ரன்கள் எடுத்த வெற்றி இலக்கை குஜராத் அணி எட்டியது. ஆர்சிபியின் அணியில் ஜோஷ் ஹேசில்வுட் (1/43) மற்றும் புவனேஷ்வர் குமார் (1/23) ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்
| அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன் ரேட் | |
| 1 | பஞ்சாப் கிங்ஸ் | 2 | 2 | 0 | 4 | 1.485 |
| 2 | டெல்லி கேபிடல்ஸ் | 2 | 2 | 0 | 4 | 1.32 |
| 3 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 3 | 2 | 1 | 4 | 1.149 |
| 4 | குஜராத் டைட்டன்ஸ் | 3 | 2 | 1 | 4 | 0.807 |
| 5 | மும்பை இந்தியன்ஸ் | 3 | 1 | 2 | 2 | 0.309 |
| 6 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 3 | 1 | 2 | 2 | -0.15 |
| 7 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 3 | 1 | 2 | 2 | -0.771 |
| 8 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 3 | 1 | 2 | 2 | -0.871 |
| 9 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 3 | 1 | 2 | 2 | -1.112 |
| 10 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 3 | 1 | 2 | 2 | -1.428 |
இன்றையப் போட்டி:
பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டில் தோல்வியடைந்துள்ளது. சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தாலும், பின்னர் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.
அதே நேரத்தில், KKR அணியும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்துள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை அணிக்கு எதிரான கடந்த இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது, அந்த தோல்விக்கு இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி பழிவாங்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.





















