மேலும் அறிய
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 முக்கிய கேட்ச்களை கோட்டைவிட்டதால் சுப்மன்கில் அதிருப்தி அடைந்தார்.

அப்செட்டான சுப்மன்கில்
Source : twitter
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த தொடரில் மிகவும் வலுவான அணியாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது.
கேட்ச்சை கோட்டை விட்ட குஜராத்:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் முக்கிய வீரர்கள் ரிக்கெல்டனை சிராஜ் 2 ரன்னிலும், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை அர்ஷத்கான் 7 ரன்னிலும் அவுட்டாக்கினர். 26 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணிக்காக வில் ஜேக்ஸ் - சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். அபாயகரமான இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள்.
இந்த ஜோடியை பிரிக்க குஜராத் அணிக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. வில் ஜேக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் கைக்கே கொடுத்த அற்புதமான கேட்ச் வாய்ப்பை குஜராத் வீரர்கள் அடுத்தடுத்து கோட்டை விட்டனர். அதுவும் பவர் ப்ளே எனப்படும் மிக மிக எளிதான கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் முகமது சிராஜ் கோட்டை விட்டனர்.
முறிந்த பார்ட்னர்ஷிப்:
முறிந்த பார்ட்னர்ஷிப்:
இதில் வில் ஜேக்ஸிற்கு 2 கேட்ச்களும், சூர்யகுமார் யாதவிற்கு 1 கேட்ச்சும் அடங்கும். இந்த ஜோடியை அப்போதே அவுட்டாக்கியிருந்தால் குஜராத் அணி மும்பைக்கு நெருக்கடி அளித்திருக்கலாம். இந்த மோசமான ஃபீல்டிங்கை பார்த்த கேப்டன் சுப்மன்கில் தனது முகத்தில் கையை வைத்துக் கொண்டார். ஆனால், இவர்களை அவுட்டாக்கத் தவறியதால் இந்த ஜோடி அதிரடிக்கு மாறி ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ஆடியது.
கடைசியில் சூர்யகுமார் யாதவை சாய் கிஷோர் அவுட்டாக்கினார். அவரது சுழலில் சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வில் ஜேக்ஸ் அரைசதம் விளாசி அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 ரன்கள் விளாசி அவுட்டானார்.
டேபிள் டாப்பர் போட்டி:
முக்கியமான போட்டியில் இதுபோன்று மோசமாக ஃபீல்டிங் செய்வது குஜராத் அணிக்கு பின்னடைவாக அமையும் அபாயம் உள்ளது. தற்போது மும்பை அணி ஆடி வருகிறது. மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் சமயத்தில் குஜராத் அணி இவ்வாறு ஃபீல்டிங் செய்வது மும்பைக்கு சாதகமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்



















