IPL 2025 GT vs RR: ராஜஸ்தானை குமுறி எடுத்த குஜராத்! சூப்பர் டூப்பர் வெற்றி! இத்தன ரன்கள் வித்தியாசமா?
IPL 2025 GT vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நடந்த இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில், முதலில் பேட் செய்த குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் அதிரடியால் 217 ரன்களை எட்டியது.
218 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, 218 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 6 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த நிதிஷ் ராணா 1 ரன்னில் அவுட்டானார். இதனால், ராஜஸ்தான் அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, சாம்சன் - ரியான் பராக் ஜோடி சேர்ந்தது. இலக்கு பெரியது என்பதால் இருவரும் அடித்து ஆடினர்.
சாம்சன் அவுட்:
இதனால், ஓவருக்கு 10 ரன்கள் என்ற வீதத்தில் ரன்ரேட் எகிறியது. அதிரடி காட்டிய ரியான் பராக் குல்வந்த் பந்தில் அவுட்டானார். அவர் 14 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, துருவ் ஜோரல் 5 ரன்னில் அவுட்டானார். தொடக்கம் முதலே ராஜஸ்தான் அணிக்காக அதிரடி காட்டிய சாம்சன் அதிரடி காட்டினாலும் அவரை பிரசித் கிருஷ்ணா பெவிலியனுக்கு அனுப்பினார். பிரசித் கிருஷ்ணா 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
36 பந்துகளில் 90 ரன்கள்:
சிராஜ், குல்வந்த கெஜ்ரோலியா, ரஷீத்கான் ஆகியோர் தங்களது பந்துவீச்சால் ராஜஸ்தானை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 90 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், அதிரடி காட்ட வேண்டிய நெருக்கடி ராஜஸ்தானுக்கு ஏற்பட்டது.
அதிரடி காட்டிய ஹெட்மயர்:
களத்தில் நின்ற ஹெட்மயர் மட்டும் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். இதனால், அவர் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஏனென்றால் தோல்வி உறுதியானாலும் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் ரன்ரேட் பாதிக்கப்படாது என்பதே ஆகும். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க சரியான நபர் இல்லாததே பெரும் சிரமமாக ராஜஸ்தான் அணிக்கு அமைந்தது. கடைசியில் ராஜஸ்தான் அணிக்காக தனி ஆளாக அதிரடி காட்டிய ஹெட்மயரும் அவுட்டானார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார்.
குஜராத் அபார வெற்றி:
கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது. பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ரஷீத்கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், அர்ஷத்கான், குல்வந்த் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

