GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GTVS PBKS: பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

குஜராத் vs பஞ்சாப்:
அகமாதபாத்தில் குஜராத் டைடன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்தபஞ்சாப் ஷஷாங்க், ஸ்ரேயாஸ் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் டைடன்ஸ் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
குஜராத் அதிரடி தொடக்கம்;
244 ரன்கள் என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் நல்ல தொடக்கம் தந்தனர், சாய் சுதர்சன் நிதனமாக விளையாட கில் அதிரடியாக விளையாடியது பவர்பிளேவின் கடைசி ஓவரில் சுப்மன் கில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அவர் 14 பந்துகளில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அடுத்தாக ஜோஸ் பட்லர் களமிறங்கினார்.
சாய் சுதர்சன் அரைசதம்:
ஜோஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி ரன் ரேட்டை குறையவிடாமல் சீரான இடைவேளையில் பவுண்டரிகள் அடித்தனர். சாய் சுதர்சன் 30 ரன்களை கடந்ததும் தனது கியரை மாற்றினார், 9வது ஓவரில் தனது அரைசதத்தை கடந்தார் சாய் சுதர்சன். குஜராத் அணி 10 ஓவரில் 104 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் 144 ரன்கள் தேவைப்பட்டது.
சாஹல் வீசிய 12-வது ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் 17 ரன்களை குஜராத் அணி, மறுப்புறம் அமைதி காத்த ஜோஸ் பட்லரும் தனது அதிரடியை காட்ட ஆரம்பித்தார். ஸ்ரேயஸ் ஐயர் பவுலர்களை மாற்றிய போதும் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை, இதற்கிடையில் சாய் சுதர்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் வீணடித்தனர்.
மாற்றம் தந்த இம்பேக்ட் வீரர்கள்:
அர்ஷ்தீப் சிங் வீசிய 13-வது ஓவரில் சிக்சருக்கு தூக்கியடிக்க முயற்சி செய்து சாய் சுதர்சன் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார், அவரும் ஜோஸ் பட்லரும் 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர். அடுத்தாக இம்பாக்ட் வீரராக ஷேர்மேன் ரூதர்போர்டு களமிறங்கினர். வந்த முதல் பந்தே சிக்சருக்கு விரட்டினார் ரூதர்போர்டு, ஸ்டோய்னிஸ் வீசிய14-வது ஓவரில் 17 ரன்கள் சேர்த்தனர் குஜராத் அணி. குறிப்பாக 10 ஒவருக்கு பிறகு 3 முறை 17 ரன்களை குவித்தனர் டைடன்ஸ் பேட்ஸ்மேன்கள்.
கடைசி ஓவர்களில் குஜராத் அணி 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வைஷாக் விஜயகுமார் இம்பேக்ட் வீரராக பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டார்.
பஞ்சாப் அணி வெற்றி:
15 ஓவர் முதல் பஞ்சாப் அணி பவுலர்கள் குஜராத் அணி பேட்ஸ்மேன்களை ரன்களை அடிக்க விடாமல் கட்டுக்கோப்பாக பந்துவீசினர், குறிப்பாக இம்பேக்ட் வீரராக வந்த வைஷாக் விஜயகுமார் சுத்தமாக பேட்ஸ்மேன்களுக்கு எட்டாத இடத்திலே பந்துகளை வீசினார்.
மறுப்புறம் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து நிலையில் மார்க்கோ யான்சனின் பந்துவீச்சில் 54 ரன்களுக்கு கீளின் போல்டானார். குஜராத் அணிக்கு கடைசி இரண்டு ஒவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முக்கியமான 19-வது ஒவரை வைஷாக் விஜயக்குமார் வீசினார். அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.
இறுதி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசிய நிலையில் ராகுல் தெவாத்தியா ரன் அவுட்டாக, கடைசி வரை போராடிய ரூதர்போர்டு 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
இறுதியில் குஜராத் அணி 232 ரன்களை எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைடன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.




















