IPL 2025 CSK vs MI: பயத்தை காட்டும் மும்பை.. பலத்தை காட்டுமா சென்னை? இன்று இரவு சம்பவம் இருக்கு!
IPL 2025 MI vs CSK: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை - மும்பை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2025 MI vs CSK: ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அணிகளாக திகழும் அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
மும்பை - சென்னை:
இந்த நிலையில், நடப்பு தொடரில் இரு அணிகளும் முதலில் மோதிக்கொண்ட போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்த வாரம் முதல் ஒவ்வொரு அணியும் தாங்கள் ஏற்கனவே ஆடிய அணிகளுடன் மீண்டும் விளையாடுகின்றன. இதன்படி, இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று மோதுகின்றன. சென்னை அணி இதுவரை தாங்கள் ஆடிய போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி தற்போது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது.
பலத்தை காட்டும் மும்பை:
மும்பை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங்கில் சென்னையை விட வலுவாக உள்ளனர். மும்பை அணியில் ரிக்கெல்டன், ரோகித்சர்மா, வில் ஜேக்ஸ், பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் தீர் என பேட்டிங் பட்டாளம் உள்ளனர். இவர்களில் ரோகித் - ரிக்கெல்டன் அதிரடி தொடக்கம் தந்தால் சென்னைக்கு சிக்கல் ஆகும். அதேபோல, மிடில் ஆர்டர் - பின்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் சென்னைக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்கவும், சென்னையின் இலக்கை எட்டவும் முடியும்.
பேட்டிங், பவுலிங்கில் எழுச்சி பெறுமா?
சென்னை அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சிக்கல் நீடிக்கிறது. இளம் வீரர் ஷைக் ரஷீத் தொடக்க வீரராக நம்பிக்கை அளிக்கிறார். ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் பேட்டிங்கில் சிறப்பாக ஆட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
பின்வரிசையில் ஷிவம் துபே அதிரடி காட்ட வேண்டும். கேப்டன் தோனி மட்டுமே சிறப்பாக ஆடி வருகிறார். புதியதாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ப்ரெவிஸ் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அச்சுறுத்தும் பவுலிங்:
பந்துவீச்சைப் பொறுத்தவரை மும்பை அணியில் பும்ரா, போல்ட், தீபக் சாஹர் உள்ளனர். இவர்கள் வேகத்தில் அசத்தினால் மும்பைக்கு பக்கபலமாக இருக்கும். அதேபோல, சுழலில் விக்னேஷ் புத்தூர், சான்ட்னர் பலமாக உள்ளனர். பாண்ட்யா கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக மும்பைக்கு பலமாக உள்ளார்.
சென்னை அணியில் கலீல் அகமது, நூர் அகமது மட்டுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். பதிரானா மேலும் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். கம்போஜ், ஜடேஜாவும் சிறப்பாக வீசினால் மும்பைக்கு சிரமம் அளிக்கலாம்.
மொத்தத்தில் இரு அணிகளும் ஆடும் இந்த போட்டியில் தன்னுடைய முழு பலத்தை கொண்டு ஆடினால் மட்டுமே மும்பை அணியை சென்னை அணி வீழ்த்த முடியும். அடுத்தடுத்து வெற்றி, சொந்த மைதான பலம் ஆகியவற்றில் முழு பலத்துடன் சென்னை அணி ஆடினால் மட்டுமே மும்பை வெற்றி பெற முடியும்.

