IPL 2025 CSK vs LSG: லக்னோ சூறாவளி இமாலய ரன்களை குவிக்குமா? கம்பேக் கிங்காக சேசிங் செய்யுமா சிஎஸ்கே?
IPL 2025 CSK vs LSG: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முதன்முறை சாம்பியனாக துடிக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மாேதி வருகின்றன. இந்த தொடரைப் பொறுத்தவரை சென்னை அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 1 போட்டியைத் தவிர 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் லக்னோ - சென்னை அணிகள் விளையாடுகின்றன. தொடர் வெற்றி பெற்று வரும் லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இந்த போட்டியில் வெற்றி என்பது மிக மிக அவசியமாகும்.
நடப்பு தொடரைப் பொறுத்தவரையில் சென்னையை காட்டிலும் லக்னோ மிகவும் பலமானதாக உள்ளது. சென்னை அணியில் ஏராளமான மாற்றங்களைச் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உண்டாகியுள்ளதால் அஸ்வின், கான்வே பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு ஜேமி ஓவர்டன், ஷைக் ரஷீத் உள்ளே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சென்னை அணியில் இன்றைய போட்டியில் ஷைக் ரஷீத், ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஜடேஜா, ஜேமி ஓவர்டன், தோனி, அன்சுல் கம்போஜ், கலீல் அகமது, பதிரானா நூர் அகமது களமிறங்கியுள்ளனர்.
ப்ளேயிங் லெவன்:
லக்னோ அணியில் மார்ஷ், மார்க்ரம், பூரண், பதோனி, ரிஷப்பண்ட், டேவிட் மில்லர், திக்வேஷ் ரதி, சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் இடம்பிடித்துள்ளனர்.
சொந்த மைதானத்தில் பேட்டிங்கில் களமிறங்கும் லக்னோ அணியில் மார்ஷ், மார்க்ரம், நிகோலஸ் பூரண், மில்லர், பதோனி, சமத் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். கேப்டன் ரிஷப்பண்ட் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும்.
வாய்ப்பை பயன்படுத்துவார்களா சென்னை வீரர்கள்?
அதேசமயம், சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள ஷைக் ரஷீத், கடந்த சில போட்டிகளில் தடுமாறும் ரவீந்திரா, தொடர்ச்சியாக தடுமாறி வரும் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஜடேஜா, ஷிவம் துபே சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். தோனி கடைசி கட்டத்தில் கலக்கினால் சென்னைக்கு துணையாக இருக்கும்.
பந்துவீச்சு:
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் லக்னோவில் ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான் பெரும் துணையாக உள்ளனர். திக்வேஷ் ரதி, பிஷ்னோய் சுழலில் எதிரணிக்கு குடைச்சல் தருவார்கள் என கருதப்படுகிறது. சென்னை அணியில் கம்போஜ், நூர் அகமது, பதிரானா, கலீல் அகமது தங்களது திறமையை காட்டினால் மட்டுமே லக்னோவை கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பாக, தொடர்ச்சியாக திறமையாக ஆடி வரும் நிகோலஸ் பூரண் ஆட்டத்தை மாற்றுவார் என்று கருதப்படுகிறது.




















