IPL 2024 Points Table: தோத்தாலும் முதலிடத்தில் கெத்தாக ராஜஸ்தான்.. 5வது இடத்தில் சென்னை.. முழு புள்ளிகள் பட்டியல் இதோ!
IPL 2024 Points Table: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முறைய 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன.
ஐபிஎல் 2024ன் நேற்றைய 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த வெற்றிக்கு பிறகு ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் முன்னேறியது. இதையடுத்தும் சென்னை சூப்பர் கிங் அணி ஒரு இடம் சரிந்து 5வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
தோல்வியடைந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முறைய 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன.
முன்னதாக, இந்த போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு பிறகு எந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளன என்ற முழு விவரத்தை பார்க்கலாம்.
ஐபிஎல் 2024 - புள்ளிகள் பட்டியல்:
தரவரிசை |
அணிகள் |
போட்டிகள் |
வெற்றி |
தோல்வி |
டை |
முடிவு இல்லை |
புள்ளிகள் |
ரன் ரேட் |
1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) |
10 |
8 |
2 |
0 |
0 |
16 |
0.622 |
2 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) |
9 |
6 |
3 |
0 |
0 |
12 |
1.096 |
3 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) |
10 |
6 |
4 |
0 |
0 |
12 |
0.094 |
4 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) |
10 |
6 |
4 |
0 |
0 |
12 |
0.072 |
5 |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) |
10 |
5 |
5 |
0 |
0 |
10 |
0.627 |
6 |
டெல்லி கேப்பிடல்ஸ் (DC) |
11 |
5 |
6 |
0 |
0 |
10 |
-0.442 |
7 |
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) |
10 |
4 |
6 |
0 |
0 |
8 |
-0.062 |
8 |
குஜராத் டைட்டன்ஸ் (GT) |
10 |
4 |
6 |
0 |
0 |
8 |
-1.113 |
9 |
மும்பை இந்தியன்ஸ் (MI) |
10 |
3 |
7 |
0 |
0 |
6 |
-0.272 |
10 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) |
10 |
3 |
7 |
0 |
0 |
6 |
-0.415 |
ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்:
1. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 509 ரன்கள், சராசரி: 63.62, ஸ்ட்ரைக் ரேட்: 146.69, 4s: 53, 6s: 15
2. விராட் கோலி (RCB): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 500 ரன்கள், சராசரி: 71.43, ஸ்ட்ரைக் ரேட்: 147.49, 4s: 46, 6s: 20
3. சாய் சுதர்சன் (GT): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 418 ரன்கள், சராசரி: 46.44, ஸ்ட்ரைக் ரேட்: 135.71, 4s: 43, 6
4, ரியான் பராக் (RR): 10 போட்டிகள், 9 இன்னிங்ஸ்கள், 409 ரன்கள், சராசரி: 58.43, ஸ்ட்ரைக் ரேட்: 159.14, 4s: 30, 6s: 25
5. கே.எல். ராகுல் (LSG): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 406 ரன்கள், சராசரி: 40, ஸ்ட்ரைக் ரேட் : 142.96, 4s: 37, 6s: 15
ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 509 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது. தற்போது இவரிடமே ஆரஞ்சு கேப் உள்ளது.
பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்:
1. டி நடராஜன் (SRH): 8 போட்டிகள், 32.0 ஓவர்கள், 192 பந்துகள், 15 விக்கெட்டுகள், சராசரி: 19.13, ரன்கள்: 287, 4-ஃபெர்ஸ்: 1.
2. ஜஸ்பிரித் பும்ரா (MI): 10 போட்டிகள், 40.0 ஓவர்கள், 240 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 18.29, ரன்கள்: 256, 5-ஃபெர்ஸ்: 1
3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK): 9 போட்டிகள், 34.2 ஓவர்கள், 206 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 22.71, ரன்கள்: 318, 4-ஃபெர்ஸ்: 1.
4. ஹர்ஷல் படேல் (PBKS): 10 போட்டிகள், 33.0 ஓவர்கள், 198 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 24.14, ரன்கள்: 338.
5. மதீஷா பத்திரனா (CSK): 6 போட்டிகள், 22.0 ஓவர்கள், 132 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி: 13.00, ரன்கள்: 169, 4-ஃபெர்ஸ்: 1.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் தற்போது அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.