IPL 2024 RR vs LSG: ”திடீரென விழுந்த அந்த பொருள்”; பதறிய வீரரக்ள்; பாதியில் நிறுத்தப்பட்ட ராஜஸ்தான் - லக்னோ ஆட்டம்!
IPL 2024 RR vs LSG: ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொணடது.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் 10 அணிகள் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 24ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் தங்களது முதல் லீக் போட்டியில் மோதிக்கொண்டது.
Breaking🚨
— Irfan Shakir 🇵🇰 (@iamirfanshakir) March 24, 2024
Match stopped in Rajasthan after spidercam cable broke and fell on the ground. #RRvsLSG#IPL2024 pic.twitter.com/FDZkbAGJTl
இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னிங்ஸை ஜாஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் தொடங்கினர். லக்னோ அணி சார்பில் முதல் ஓவரை மோஷன் கான் வீசினார். முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், மைதானத்தில் ஸ்பைடர் கேமராக்களுக்காக கட்டப்பட்டிருந்த கம்பி அறுந்து, ஸ்பைடர் கேமரா மைதானத்திலேயே விழுந்தது. இதனால் 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. அறுந்து விழுந்த கம்பி மற்றும் ஸ்பைடர் கேமராவை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது.