CSK Released Players: பென் ஸ்டோக்ஸை கழட்டி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
CSK Released Players List 2024: இதில் அம்பாத்தி ராயுடு மட்டும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஐபிஎல்-லின் போதே அறிவித்திருந்தார்.
ஐபிஎல் லீக்கில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர் வரும் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக தங்களது அணியில் புதிய வீரர்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் யார் என்பதுதான் சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரை விடுவித்துள்ளது. இதில் அம்பாத்தி ராயுடு மட்டும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஐபிஎல்-லின் போதே அறிவித்திருந்தார்.
இதன் மூலம் சென்னை அணியின் வசம் தற்போது 32.2 கோடி உள்ளது. இதன் மூலம் சென்னை அணி வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ள மினி ஏலத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 6 வீரர்களை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.