Watch Video: இந்த சீசனில் 108 மீ தூரம் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக்.. ஒட்டுமொத்த பட்டியலில் யார் முதலிடம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த 2024 ஐபிஎல் சீசனில் மிக நீண்ட தூர சிக்ஸரை பறக்கவிட்டார்.
நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் அதிக அளவில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர். முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. இந்த முதல் இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் 19 பவுண்டரிகள் மற்றும் 22 சிக்ஸர்கள் அடித்தனர்.
பதிலுக்கு பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது. இந்த இரண்டாவது இன்னிங்ஸின்போது பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் 24 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
இந்தநிலையில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த 2024 ஐபிஎல் சீசனில் மிக நீண்ட சிக்ஸரை பறக்கவிட்டார்.
108 மீட்டர் சிக்ஸர்:
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2024 இல் 108 மீட்டர் சிக்ஸர் அடித்து மிக நீண்ட தூர சிக்ஸரை அடித்தார்.
108 METER SIX BY 38-YEAR-OLD DINESH KARTHIK 🤯💪pic.twitter.com/CnOwcV5vPJ
— Johns. (@CricCrazyJohns) April 15, 2024
இந்த சீசனில் இவருக்கு அடுத்த இடத்தில் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 106 மீட்டர் சிக்ஸர் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இவர்கள் அடித்த இந்த மூன்று சிக்ஸர்களும் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராகவே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று வீரருக்கு அடுத்த இடத்தில், இஷான் கிஷன் 103 மீட்டர் சிக்ஸருடன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 103 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்தார்.
ஐபிஎல் 2024லில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியல்:
- தினேஷ் கார்த்திக் (RCB) vs SRH - 108 மீ
- ஹென்ரிச் கிளாசென் (SRH) vs RCB - 106 மீ
- வெங்கடேஷ் ஐயர் (KKR) vs RCB - 106 மீ
- நிக்கோலஸ் பூரன் (LSG) vs RCB - 106 மீ
- இஷான் கிஷன் (MI) vs SRH - 103 மீ
- ஆண்ட்ரே ரஸ்ஸல் (KKR) vs SRH - 102 மீ
- டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (DC) vs MI - 101 மீ
- அபிஷேக் போரல் DC) vs PBKS - 99 மீ
- மஹிபால் லோம்ரோர் (RCB) vs LSG - 98 மீ
- டிராவிஸ் ஹெட் (SRH) vs MI - 98மீ
ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர் யார்..?
எண் | வீரர்கள் | ஆண்டு | அணி | எதிரணி | சிக்ஸர் தூரம் (மீட்டர்) |
1. | அல்பி மார்கல் | 2008 | சென்னை | டெல்லி | 124 |
2. | பிரவீன் குமார் | 2008 | பெங்களூரு | ராஜஸ்தான் | 124 |
3. | கில்கிறிஸ்ட் | 2011 | பஞ்சாப் | பெங்களூரு | 122 |
4. | ராபின் உத்தப்பா | 2010 | பெங்களூரு | மும்பை | 120 |
5. | கிறிஸ் கெயில் | 2013 | பெங்களூரு | புனே | 119 |
6. | ராஸ் டெய்லர் | 2008 | பெங்களூரு | சென்னை | 119 |
7. | யுவராஜ் சிங் | 2009 | பஞ்சாப் | சென்னை | 119 |
8. | பென் கட்டிங் | 2016 | ஹைதராபாத் | பெங்களூரு | 117 |
9. | லியாம் லிவிங்ஸ்டன் | 2022 | பஞ்சாப் | குஜராத் | 117 |
10. | பாஃப் டுபிளெசிஸ் | 2023 | பெங்களூரு | லக்னோ | 115 |