Watch Video: ஒரே வீடியோ! ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி தந்த தல தோனி - என்ன சம்பவம்?
தோனியை கேலி செய்தவர்களுக்கு பதிலடி தரும் விதமாக தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக கேப்டனாக இருந்து ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. இவரை கோடான கோடி ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவரைப் பிடிக்காத சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். தோனியைப் பிடிக்காத சிலர், சமூக வலைதளங்களில் தோனியை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதனை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து சமூக வலைதளங்களில் உள்நோக்கத்துடனே பகிர்ந்து வந்தர். அந்த வீடியோவில், தோனி நடனமாடுவார். தோனி நடனமாடும் வீடியோவுக்கு போலோ ஜோ கோயல் பாடலை பின்னணி இசை சேர்த்து தோனியை கேலி செய்வதாக நினைத்து பகிர்ந்து வந்தனர்.
Captain cool 🫣😹 pic.twitter.com/Jcgaae8CdS
— Byomkesh (@byomkesbakshy) September 11, 2022
இந்நிலையில் தோனி தற்போது நடித்துள்ள ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் விளம்பரத்தில் போலோ ஜோ கோயல் பாடலைப் பாடி நடித்துள்ளார். இந்த விளம்பர வீடியோ இணையத்தில் தோனியின் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் வீடியோவாக தற்போது மாறியுள்ளது. அதில், தோனியை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட வீடியோவில் இருந்த பாடலைப் பாடி, தோனியைப் பிடிக்காதவர்களுக்கு தோனி பதிலடி கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
Dhoni singing " Bole Jo koyal " 😭😭😭pic.twitter.com/2xxFG3XRVw
— MAHIYANK™ (@Mahiyank_78) April 5, 2024

