(Source: ECI/ABP News/ABP Majha)
LSG vs MI LIVE Score: போராடித் தோற்ற மும்பை; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!
IPL 2024 LSG vs MI LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
மார்ச் மாதம் 22ஆம் தேதியில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய 17வது ஐபிஎல் தொடரில் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டது. இதில் ஒரு சில அணிகள் தங்களது அடுத்தகட்ட வாய்ப்பினை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. அதேபோல் ஒரு சில அணிகள் அடுத்த கட்ட சுற்றுக்குத் தகுதி பெற தீவிரமாக விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளது. இந்த போட்டி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா பிறந்தநாள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் இன்றைய போட்டியினை வென்று ரோகித் சர்மாவுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கவேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மிகவும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் லக்னோ அணிகள் அதிகபட்சமாக 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மும்பை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும்தான் இரு அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும், எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடின உழைப்பினை களத்தில் செலுத்தும்.
உலகக்கோப்பை அணியில் 4 மும்பை வீரர்கள்
ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
LSG vs MI LIVE Score: மும்பை அணி இதுவரை!
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
LSG vs MI LIVE Score: போராடித் தோற்ற மும்பை; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!
இறுதியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்ததால் மும்பை அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது.
LSG vs MI LIVE Score: கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி!
20வது ஓவரில் லக்னோ அணி 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது. 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது.
LSG vs MI LIVE Score: ஆயுஷ் பதோனி ரன் - அவுட்!
அதிரடியாக பவுண்டடி விளாசிய ஆயூஷ் பதோனி ரன் - அவுட் முறையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
LSG vs MI LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. லக்னோ அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்படுகின்றது.