மேலும் அறிய

GT vs KKR: நெஞ்ச தொட்டுட்டீங்க பாஸ்! கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்சியை மாற்றும் குஜராத்; காரணம் இதுதான்..!

IPL 2024 GT vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிராக வரும் 13-ஆம் தேதி குஜராத் அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளது.

கிரிக்கெட் உலகத்தில் அதிக மக்களால் பார்க்கப்படும் லீக் தொடர் என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்தான். 2008-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக இந்த தொடரை பல்வேறு சவாலான சூழல்களுக்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி வருகின்றது. 

இந்நிலையில் இந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டில் 17-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்திவருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த லீக் தொடர் வரும் 26ஆம் தேதி முடிவடையவுள்ளது. தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த லீக் சுற்றுப் போட்டிகளில் இதுவரை மொத்தம் 57 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதன் முடிவில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ளது. 

இதில் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி வரும் 13ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வழக்கமாக அணியும் ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடாமல், லாவெண்டர் நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளனர். இதற்கான காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் தரமான மருத்துவத்தை அவர்களுக்கு அளிக்கவும் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்” இந்த லாவண்டர் நிற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடவுள்ளனர். குஜராத் அணியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய கடைசி லீக் போட்டியில் குஜராத் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இதுபோன்று லாவண்டர் ஜெர்சி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டும் தங்களது சொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடும் லீக் போட்டியில் குஜராத் அணி லாவண்டர் நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. 

குஜராத் அணி தனது அடுத்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நாளை அதாவது மே 10ஆம் தேதி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு அடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக குஜராத் அணி களமிறங்குகின்றது. இதையடுத்து இந்த சீசனில் தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணி சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணிக்கு எதிராக வரும் 16ஆம் தேதி ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் குஜராத் அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்கலாம். ஆனால் அதற்கு மற்ற போட்டிகளின் முடிவும் மிகவும் அவசியம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget