GT vs DC: சொந்த மண்ணில் டெல்லிக்கு தோல்வியை கொடுக்குமா குஜராத்..? இரு அணிகளும் கட்டாய வெற்றிக்காக களம்!
IPL 2024, GT vs DC: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன.
ஐபிஎல் 2024 சீசனின் 32வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த சீசனில் குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அதேசமயம் டெல்லி அணி இந்த சீசனில் 6 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்காக கடந்த போட்டியில் அறிமுகமான ஜாக் ப்ரேசர் - மெர்க்குர்க்கின் அதிரடி இன்னிங்ஸால், லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 171 ஆகும். அதேபோல், குஜராத் அணிக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் 162 ஆகும்.
பிட்ச் ரிப்போர்ட்:
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 5 கருப்பு களி மண் மற்றும் 6 சிவப்பு களிமண் பிட்சுகள் உள்ளன. சிவப்பு மண்ணை விட கருப்பு மண் பிட்சுகள் பவுன்ஸ் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக இந்த ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுவரை இந்த ஸ்டேடியத்தில் 30 ஐபிஎல் போட்டிகள் இங்கு நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 14 போட்டிகளிலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 173 ஆகும். எனவே, இங்கு முதலில் டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்யலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், சாய் சுதர்ஷன், அபினவ் மனோகர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா.
டெல்லி கேப்பிடல்ஸ்:
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஜாக் பிரேசர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
இரு அணிகளின் முழுமையான விவரம்:
குஜராத் டைட்டன்ஸ் : சுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மந்தர், சாய் சுதர்ஷன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷாருக் கான், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவதியா, கார்த்திக் தியாகி, ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, சாய் கிஷோர், உமேஷ் யாதவ், ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா மற்றும் மானவ் சுதர்.
டெல்லி கேப்பிடல்ஸ் : ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஸ்வஸ்திக் சிகாரா, யாஷ் துல், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, ஜே ரிச்சர்ட்சன், கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், பிரவீன் துபே, ரசிக் தார், அக்ஷர் பட்வால், , ஜாக் ஃப்ரேசர் மெக்குர்க், லலித் யாதவ், சுமித் குமார், அபிஷேக் போரல், குமார் குஷாக்ரா, ரிக்கி புய், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.