
IPL 2024 Final: மூன்றாவது முறையாக சேப்பாக்கத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி! இதுவரை இந்த ஸ்டேடியத்தில் நடந்தது என்ன?
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். பற்றிய முழு விவரங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

MA Chidambaram Stadium IPL Stats And Records: இந்தியன் பிரீமியர் லீக் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி:
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாம் தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Iyer 😂pic.twitter.com/Cf37uQCwvu
— Siddarth Srinivas (@sidhuwrites) May 26, 2024
இந்தநிலையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் பற்றிய முழு விவரங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- சென்னையில் விளையாடிய மொத்த ஐபிஎல் போட்டிகள்: 84
- முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற அணிகள் : 49 போட்டிகள்
- இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்ற அணிகள்: 35 போட்டிகள்
- முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர்: 165
- போட்டிகள் டாஸ் வென்ற பிறகு வென்றவை: 42
- டாஸ் இழந்த பிறகு வென்ற போட்டிகள்: 42
- அதிகபட்ச ஸ்கோர் : 246/5
- குறைந்தபட்ச ஸ்கோர்: 70
- சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோர்: 201/6
டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது நல்லது:
முதலில் பேட்டிங் செய்யும் அணிகள்தான் சென்னையில் அதிக ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெற்றதாக புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. இவ்வளவு ஏன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியிலும் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.
வெற்றிக்கு பனி முக்கிய காரணமாக இருக்கும்..!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு சாதகமாக பனி இருக்கும். போட்டியின்போது பனி விழுந்தால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக அமையும். அதிக விக்கெட்கள் விழும்.
சேப்பாக்கத்தில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டி:
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் இதுவரை இரண்டுமுறை இறுதிப்போட்டிகள் நடந்துள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியின் மூலம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது. 2011ல் இங்கு நடத்தப்பட்ட முதல் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.
The Final of IPL 2024 - KKR led by Shreyas Iyer. 👊 pic.twitter.com/ElXgfwNxDT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2024
இதே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது இலக்கை விரட்டிய அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014ம் ஆண்டு தனது இரண்டாவது கோப்பையை வென்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

