Chepauk Stadium: மல்லுக்கட்டும் கொல்கத்தா - ஐதராபாத்; சேப்பாக்கம் மைதானம் எப்படி? வரலாறு சொல்வது என்ன?
Chepauk Stadium IPL Records: நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி, நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Chepauk Stadium IPL Records: நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
ஐபிஎல் இறுதிப்போட்டி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் மோதும்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய ஒரு போட்டியில், கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியுள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம், வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். 160+ என்ற இலக்கை சேஸ் செய்வது என்பதே கடினமானதாகவே இருக்கும். ஆனால், நடப்பாண்டில் பேட்டிங் சற்று எளிதானதாகவே காணப்படுகிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் சேப்பாக்கம் மைதானத்திலும் அதிரடியாக ரன்களை குவித்துள்ளனர். இதனால், நாளைய இறுதிப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க வாய்ப்புள்ளது.
சேப்பாக்கம் மைதான ஐபிஎல் வரலாறு
சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 84 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 49 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 35 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்யும் ஒரு அணியின் சராசரி ஸ்கோர் 164.37 ஆக உள்ளது. ஒரு ஓவருக்கான ரன் ரேட் 8.04 ஆக இருக்க, சராசரியாக 26.37 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை சேர்த்தது. அதேநேரம், குறைந்தபட்சமாக கடந்த 2019ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக, பெங்களூர் அணி 70 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியுள்ளது. கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 11 ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், சேஸ் செய்த அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் 122 அரைசதங்களும், 7 சதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் வரலாறு:
சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி இதுவரை, 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் தோல்வியடைய ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 177 ரன்களையும், குறைந்தபட்சமாக 134 ரன்களையும் சேர்த்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா வரலாறு:
சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி இதுவரை, 14 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதிகபட்சமாக மூன்று முறை சேஸ் செய்து வென்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் சேர்த்துள்ளது.