IPL 2024 Final: அனல் பறக்கும் இறுதிப் போட்டி! KKR ஐ மிரட்ட காத்திருக்கும் டாப் 5 SRH வீரர்கள் - யார்? யார்?
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 26) நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் இறுதிப் போட்டி:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17-ல் இன்று (மே 26) இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது இரண்டாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களம் காண உள்ளது. இச்சூழலில் அந்த அணியில் கோப்பையை கைப்பற்ற உதவும் 5 வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:
1. டிராவிஸ் ஹெட்:
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரராக இருந்தவர் டிராவிஸ் ஹெட். இந்நிலையில் தான் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024 ஆம் ஆண்டு டி20 ஐபிஎல் சீசனுக்காக ரூபாய் 6.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
Just one of those Travis Head starts 💥😉#SRH 64/0 already in the chase!
— IndianPremierLeague (@IPL) May 8, 2024
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #SRHvLSG pic.twitter.com/I91EkXCmvq
அதன்படி அந்த அணியின் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஹெட். அதன்படி 192.90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 567 ரன்களை குவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். அதேபோல் நான்கு அரைசதங்களையும் இந்த சீசனில் பதிவு செய்துள்ளார்.
2. அபிஷேக் சர்மா:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் மட்டும் மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் குவித்தது. இதில் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டம் ஒரு பங்காக இருந்தாலும் மற்றொரு புறம் அபிஷேக் சர்மாவும் இதற்கு காரணமாக அமைந்தார். இந்த சீசனில் மட்டும் அபிஷேக் சர்மா 482 ரன்களை குவித்துள்ளார்.
Abhishek Sharma's scintillating knock comes to an end but he's put @SunRisers on 🔝 with his astonishing strokes 🔥
— IndianPremierLeague (@IPL) March 27, 2024
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #SRHvMI pic.twitter.com/OoHgAK6yge
34.42 என்ற சராசரியில் 207.75 ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கிறார். 350 ரன்களுக்கு மேல் அடித்த பேட்டர்களில் அபிஷேக் சர்மாவும் ஒருவர். இதனால் இன்றைய போட்டியில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் முக்கிய வீரராக இருப்பார்.
3. ஹென்ரிச் கிளாசென்:
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஒரு சில ஆட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் ஹைதராபாத் அணியை மீட்பதில் முக்கியமானவராக இருந்தவர் ஹென்ரிச் கிளாசென். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் பேட்டரான இவர் 42.09 சராசரியுடன் 176.04 என்ற 463 ரன்களை குவித்துள்ளார்.
The moment when @SunRisers created HISTORY!
— IndianPremierLeague (@IPL) March 27, 2024
Final over flourish ft. Heinrich Klaasen 🔥
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #SRHvMI pic.twitter.com/QVERNlftkb
இந்த சீசனில் கிளாசென் 4 அரைசதங்களை விளாசி இருக்கிறார். இதில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாசி அசத்தி இருந்தார். அதேபோல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டரில் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதனால் இன்றைய போட்டியிலும் இவரது ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
4. பேட் கம்மின்ஸ்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஒரு வெளிநாட்டு வீரரை இந்த விலைக்கு ஏலத்தில் எடுத்து இருக்கிறார்களே என்ற கேள்வி எல்லாம் எழுந்தது. ஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
🔙 to 🔙 Maximums from Captain Cummins 💥💥
— IndianPremierLeague (@IPL) April 25, 2024
He is keeping the fight 🔛
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #SRHvRCB | @SunRisers pic.twitter.com/PmRibewT7T
அதன்படி இந்த சீசனில் 32.23 என்ற சராசரியில் 9.28 என்ற எக்கனாமியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
5. டி நடராஜன்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி நடராஜன். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி இருந்தார். கடந்த சீசனில் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய இவர் இந்த சீசனில் மட்டும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
YORKED! 🎯
— IndianPremierLeague (@IPL) April 20, 2024
T Natarajan gets Lalit Yadav with a perfect delivery 🔥🔥
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #DCvSRH pic.twitter.com/dABi6jakOd
இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இச்சூழலில் தான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தன்னுடைய பந்து வீச்சாளர் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: IPL 2024: "மனம் உடைந்து போனேன்! கம்பீர்தான் மாற்றினார்" மனம் திறந்த கொல்கத்தா உரிமையாளர் ஷாரூக்கான்!
மேலும் படிக்க: Pat Cummins: வெறும் 3 விக்கெட்டுகள்! வார்னேவின் 16 ஆண்டுகால சாதனையை கம்மின்ஸ் முறியடிப்பாரா?