Pat Cummins: வெறும் 3 விக்கெட்டுகள்! வார்னேவின் 16 ஆண்டுகால சாதனையை கம்மின்ஸ் முறியடிப்பாரா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது பெயரில் புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். 2024 சீசனானது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
பாட் கம்மின்ஸ் புதிய சாதனை படைக்க வாய்ப்பு:
இன்று சென்னையில் நடைபெறும் கொல்கத்தா - ஹைதராபாத் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது பெயரில் புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது.
இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் குறைந்தது 3 விக்கெட்டுகளை எடுத்தால், முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வார்னேவின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து, ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பார்.
நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் பாட் கம்மின்ஸ் இதுவரை 15 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 32.24 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், ஷேன் வார்னேவின் புகழ்பெற்ற சாதனையை முறியடிக்க, கம்மின்ஸ் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்த வேண்டும்.
2008ல் கலக்கிய வார்னே:
ஐபிஎல் 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய வார்னே, சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு 19 விக்கெட்களை வீழ்த்தி பட்டத்தை வென்று அசத்தினார். கம்மின்ஸ் ஐ.பி.எல். வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து வார்னரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனில், சென்னை இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குறைந்தது 3 விக்கெட்களை வீழ்த்த வேண்டும்.
ஒரு ஐபிஎல் சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்
Shane Warne in IPL 2008 ✅
— Wisden India (@WisdenIndia) May 26, 2024
Anil Kumble in IPL 2010 ✅
Pat Cummins in IPL 2024 ✅
Captains with the most wickets in a single IPL season 🔥#ShaneWarne #AnilKumble #PatCummins #IPL2024 #Cricket #IPLFinal pic.twitter.com/ycXQ0M3Tcp
- ஷேன் வார்னே- 19 (ராஜஸ்தான் ராயல்ஸ், 2008)
- பாட் கம்மின்ஸ் - 17 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2024)
- அனில் கும்ப்ளே- 17 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 2010)
- ரவிச்சந்திரன் அஸ்வின்- 15 (பஞ்சாப் கிங்ஸ், 2019)
- ஷேன் வார்னே- 14 (ராஜஸ்தான் ராயல்ஸ், 2009 )
இது தவிர, ஒரு ஐபிஎல் சீசனை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பட்டியலில் பாட் கம்மின்ஸுக்கு வாய்ப்பு உள்ளது.
2008ம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, ஆடம் கில்கிறிஸ்ட் 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். டேவிட் வார்னர் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சாம்பியன் ஆக்கினார்.
இதுவரை மூன்று கேப்டன்கள் மட்டுமே தங்கள் முதல் சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர்.
2008: ஷேன் வார்ன்
2013: ரோஹித் சர்மா
2022: ஹர்திக் பாண்டியா
Only three captains won IPL trophy in their first season:
— CricTracker (@Cricketracker) May 26, 2024
2008: Shane Warne
2013: Rohit Sharma
2022: Hardik Pandya
Can Pat Cummins join the list? pic.twitter.com/oclDGdQaTU
பாட் கம்மின்ஸ் இன்று அந்த சாம்பியன் கேப்டன் பட்டியலில் இன்று சேர முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.