![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
MS Dhoni: ”மூச்சுள்ளவரை சி.எஸ்.கே மட்டும்தான்” ஆர்.சி.பிக்கு ஆதரவு கேட்ட ரசிகருக்கு தல தோனி நச் பதில்!
Dhoni: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்ஷெல், ஷர்துல் தாகூர், சமீர் ரிஸ்வி, முஸ்தஃபிகுர் ரஹிம் என ஆஸ்தான வீரர்களை சென்னை அணி வாங்கியது.
![MS Dhoni: ”மூச்சுள்ளவரை சி.எஸ்.கே மட்டும்தான்” ஆர்.சி.பிக்கு ஆதரவு கேட்ட ரசிகருக்கு தல தோனி நச் பதில்! IPL 2024 CSK Skipper MS Dhoni Reaction After RCB Fan Asked MSD to Support Royal Challengers Bangalore MS Dhoni: ”மூச்சுள்ளவரை சி.எஸ்.கே மட்டும்தான்” ஆர்.சி.பிக்கு ஆதரவு கேட்ட ரசிகருக்கு தல தோனி நச் பதில்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/8677a4d0dfb210eb00f0fd9111a702671703155079570102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது கடந்த 19ஆம் தேதி துபாயில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான மினி ஏலம்தான். இந்த மினி ஏலத்தில் அதிகப்படியான விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் ஆஸ்திரேலியா வீரர்களை வாங்குவதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
ஐ.பி.எல். ஏலம்:
இந்த ஏலத்தில் சென்னை அணி நியூசிலாந்து வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்ஷெல், ஷர்துல் தாகூர், சமீர் ரிஸ்வி, முஸ்தஃபிகுர் ரஹிம் என ஆஸ்தான வீரர்களை சென்னை அணி வாங்கியது. இதுவே சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மினி ஏலம் தொடங்கி மிகப்பெரிய ஏலத்தில் பங்கேற்ற பின்னர் சென்னை அணி நிர்வாகத்தின் வீரர்கள் தேர்வு சென்னை அணி ரசிகர்களே மிகவும் அதிருப்தி பதிவுகளை சமூகவலைதளங்களில் பகிர்வர். ஆனால் இம்முறையோ சென்னை அணியின் வீரர்கள் தேர்வு குறித்து சமூகவலைதளங்களில் சென்னை அணி ரசிகர்கள் விசில் பறக்கவிட்டு வருகின்றனர்.
ஆர்.சி.பி.க்கு ஆதரவா? தோனி பதில்:
இப்படியான நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது. அந்த வீடியோவில் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பை கூட வெல்லாத அணியான பெங்களூரு அணியின் தீவிர ரசிகர் தோனியிடம் உரையாடுகின்றார். அந்த உரையாடலில் தோனியைப் பார்த்து பெங்களூரு அணி ரசிகர், “ சார்.. நான் கடந்த 16 வருசமா பெங்களூரு அணியின் ரசிகராக இருக்கின்றேன். நீங்கள் சென்னை அணிக்காக 5 கோப்பைகள் வென்று கொடுத்து விட்டீர்கள். நீங்கள் ஏன் பெங்களூரு அணிக்கு வந்து எங்களுக்கு ஒரு கோப்பை வென்று கொடுக்கக்கூடாது என கேள்வி எழுப்புகின்றார்.
இதற்கு தோனி, அனைத்து அணிகளும் மிகச்சிறந்த அணிகள்தான். களத்திற்கு போகும் வரை நம்மால் எதுவுமே யூகிக்க முடியாது. ஒரு போட்டியில் நாம் வெல்வோமா அல்லது தோல்வியைத் தழுவுவோமா என்பதை அன்றைய போட்டியில் நாம் விளையாடுவதைப் பொறுத்துதான் அமையும். அதேபோல் அனைத்து அணிகளிலும் தலைசிறந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் அனைவராலும் ஒரே போட்டில் களமிறங்கமுடியாது. சில வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டலாம். சிலர் போட்டியின்போது அணியில் இணையாமல் இருக்கலாம்.
MS Dhoni's response when one of the RCB fan asked Dhoni to come and support RCB to win a title.
— Johns. (@CricCrazyJohns) December 20, 2023
- This is 👏pic.twitter.com/mcvlfrMBwI
ரசிகர்கள் உற்சாகம்:
இப்படி இருக்கும்போது, நான் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். ஆனால் மற்ற அணிகளை விடவும் எனக்கு எனது அணிதான் எப்போதும் பிரதானம். இப்படியான நிலையில் நான் எப்படி எனது அணியில் இருந்து வெளியேறி மற்றொரு அணியை ஆதரிக்க முடியும்? எங்களது அணி ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என நீங்களே யோசியுங்கள்” என பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தோனியின் பதிலால் சென்னை அணி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)