Chennai Super Kings: 250 போட்டிகள் விளையாடிய சி.எஸ்.கே! இந்த முறை மிஸ் செய்த தோனி!
ஐ.பி.எல் டி 20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 250 வது போட்டியில் விளையாடி வருகிறது.
சி.எஸ்.கே vs ஆர்.சி.பி:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப்போதில் இருந்து அந்த அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்தி வந்தவர் எம்.எஸ்.தோனி. அதோடு 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்தவர்.
மேலும், 5 முறை ரன்னர் அப் வரை அழைத்துச் சென்றவரும் தோனி தான். இச்சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியை நீக்கி விட்டு அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் ருதுராஜ் கெய்க்வாட். அந்த வகையில் இந்த சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 22) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை அணியின் 250 வது போட்டி:
முன்னதாக இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது 250 வது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. அதேநேரம் முதல் போட்டி, 50 வது போட்டி, 100 வது போட்டி, 150 வது போட்டி மற்றும் 200 வது போட்டிகளை தல தோனி தான் வழிநடத்தினார். இந்நிலையில் தான் இன்றைய 250 வது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அந்த அணியை வழிநடத்துகிறார். அதேபோல், இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 31 போட்டிகள் விளையாடி இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 20 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தாங்கள் விளையாடிய 31 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை அணி தங்களது 250 டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
CSK playing their 250th T20 match tonight.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 22, 2024
- MS Dhoni led them in 1st, 50th, 100th, 150th, 200th match, Ruturaj leading CSK in the 250th match. pic.twitter.com/ZZBOVVB3tA
முக்கியமாக தோனி கேப்டனாக இல்லாமல் ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டு வரும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் ஐ.பி.எல் 17 வது சீசனின் முதல் போட்டி மற்றும் சி.எஸ்.கே அணியின் 250 போட்டி என்பதால் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றனர் சி.எஸ்.கே ரசிகர்கள்.
மேலும் படிக்க: CSK Anthem IPL 2024: விசில் போடு... ANTHEM வெளியிட்ட சி.எஸ்.கே!ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் படிக்க: Chennai Super Kings: 250 போட்டிகள் விளையாடிய சி.எஸ்.கே! இந்த முறை மிஸ் செய்த தோனி!