மேலும் அறிய
Advertisement
Indian Premier League: இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு வரை இந்த 15 ஆண்டுகளில், ஐபிஎல்லில் 250+ ரன்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடுக்கப்பட்டது.
டி20 கிரிக்கெட் தொடங்கிய ஆரம்ப காலக் கட்டத்தில் 180 ரன்கள் என்பதே ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து, டி20யில் 200 ரன்கள் எடுத்தாலே பெரிய விஷயம்.
ஆனால், இப்பொது 250 ரன்கள் என்பது மிகவும் அசால்டாகிவிட்டது. அதிலும், ஐபிஎல்லில் அதுவும் தொடராகி விட்டது. இந்த சீசனில் அணிகள் பல முறை 250+ ரன்களை எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிக முறை.
250+ ரன்கள் - 2008 முதல் 2022 vs 2023 முதல் 2024:
- 2008 முதல் 2022 வரை: கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு வரை இந்த 15 ஆண்டுகளில், ஐபிஎல்லில் 250+ ரன்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடுக்கப்பட்டது. அதுவும், கடந்த 2013ம் ஆண்டு பெங்களூருவில் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு வரை அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
- 2023 முதல் 2024 வரை: இதுவரை இந்த இரண்டு சீசன்களிலும் ஐபிஎல் அணிகள் ஒன்பது முறை 250+ ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணி அதிகபட்ச ரன்களை குவித்தது. ஐபிஎல் 2024ன் 30வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.
- ஐபிஎல் 2024ன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் இடையேயான 8வது போட்டியில் இதுவரை எடுக்கப்பட்ட இண்டாவது அதிகபட்ச ஸ்கோர். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது.
- ஐபிஎல் 2024ன் 16வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸில் இதுவரை இல்லாத மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவானது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.
- ஐபிஎல் 2024ன் 35வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இது நான்காவது அதிகபட்ச ஸ்கோராகும்.
- ஐபிஎல் 2024ன் 42வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்திருந்தது.
- ஐபிஎல் 2024ன் 30வது போட்டியில், அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.
- ஐபிஎல் 2024ன் 42வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது.
- ஐபிஎல் 2023ன் 48வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
- ஐபிஎல் 2024ன் 43வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion