Virat Kohli Ducks in IPL: கோலிக்கு ராசியில்லாத இன்றைய நாள்! 3வது முறையாக டக்... பாடாய்படுத்தும் ஏப்ரல் 23!
ஐபிஎல் வரலாற்றில் கோலியின் பத்தாவது டக் ஆகியுள்ளார். இந்த பத்து டக்கில் ஏழுமுறை கோல்டன் டக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனின் 32வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதி வருகின்றனர். காயம் காரணமாக ஃபாப் டு பிளெசிஸ் இன்றைய போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்குவதால், விராட் கோலியே பெங்களூரு அணிக்கு தலைமை தாங்கினார்.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் வழக்கம்போல் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். கடந்த போட்டியில் இந்த ஜோடி 100 ரன்கள் குவித்தனர். அதேபோல், இந்த போட்டியிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட நிலையில், போல்ட் வீசிய முதல் பந்தே ஆர்சிபி மற்றும் அணியின் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தரும்படியாக அமைந்தது.
ஆம்! விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி நடையைக்கட்டினார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கோலி, தொடர்ந்து சொதப்பி வருவது நாம் அறிந்ததே. அது மீண்டும் இன்று நிரூபணம் ஆகியுள்ளது.
#ViratKohli #rcbvsrr pic.twitter.com/V55XZZhw0C
— Akash Kharade (@cricaakash) April 23, 2023
இது ஐபிஎல் வரலாற்றில் கோலியின் பத்தாவது டக் ஆகியுள்ளார். இந்த பத்து டக்கில் ஏழுமுறை கோல்டன் டக் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் டக் அவுட்டான முழு பட்டியல்:
எண்ணிக்கை | மதிப்பெண் | எதிரணி | ஆண்டு | இடம் |
1 | 0 (1) | மும்பை இந்தியன்ஸ் | 2008 | பெங்களூரு |
2 | 0 (2) | மும்பை இந்தியன்ட்ஸ் | 2014 | துபாய் |
3 | 0 (5) | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 2014 | பெங்களூரு |
4 | 0 (1) | கிங்ஸ் XI பஞ்சாப் | 2014 | பெங்களூரு |
5 | 0 (2) | குஜராத் லயன்ஸ் | 2016 | பெங்களூரு |
6 | 0 (1) | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 2017 | கொல்கத்தா |
7 | 0 (1) | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 2022 | நவி மும்பை |
8 | 0 (1) | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 2022 | மும்பை (பிரபோர்ன்) |
9 | 0 (1) | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 2022 | மும்பை |
10 | 0 (1) | ராஜஸ்தான் ராயல்ஸ் | 2023 | பெங்களூரு |
அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் மந்தீப சிங் இதுவரை 15 டக் அவுட்டாகி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் 15 முறையும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 14 முறை டக் அவுட்டாகி உள்ளனர்.
ராசியில்லாத ஏப்ரல் 23
ஏப்ரல் 23 ம் நாளில் தொடர்ந்து 3வது ஆண்டாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் கோலி வெளியேறினார். 2017 ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் இதே நாளில் கோலி முதல் பந்தே கோல்டன் டக் அவுட்டாகி நடையைக்கட்டினார். அதேபோல், கடந்த ஆண்டு 2022லிலும் இன்றைய நாளில் விளையாடிய விராட் கோலி முதல் பந்தே அவுட்டானார்.
23rd April - A day to forget for Virat Kohli.
— CricTracker (@Cricketracker) April 23, 2023
📸: IPL#ViratKohli #TrentBoult #RCBvsRR pic.twitter.com/tyxVr7ciwy
இன்றைய அணி விவரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்