மேலும் அறிய

SRH vs PBKS : ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் இன்று மோதல்.. வெல்லப்போவது யார்? - கள நிலவரம் இதுதான்..!

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துக்கிறது. 

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி  16வது ஐபிஎல் சீசன் தொடங்கியது. சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா,   லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் ஏறக்குறைய எல்லா அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி விட்டது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இதனிடையே இன்று நடைபெறும் 14 வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. 

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை

எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 72 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் லக்னோ அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. இதனால் இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி களமிறங்கும். ஹைதராபாத் அணியில் பேட்டிங் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். 

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை பொறுத்தவரை பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. அதனால் இப்போட்டியில் அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெற முயற்சிக்கும். 

மைதானம் எப்படி? 

ஹைதராபாத் அணியின் உள்ளூர் மைதானமான ராஜீவ் காந்தி மைதானத்தில்  நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு விளையாடிய 46 போட்டிகளில் 29 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இங்கு மொத்தம் 65 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 37 முறை வெற்றி பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீசவே விரும்பும் என எதிர்பார்க்கலாம். 

அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 

ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்) , ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், அடில் ரஷித் உம்ரான் மாலிக் ஆகியோரும்,  பஞ்சாப் அணியில்  ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். 

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் (impact players) யார்? 

ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக்ஸ், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், அகேல் ஹொசைன் ஆகியோரும், பஞ்சாப் அணியில் ககிசோ ரபாடா, ரிஷி தவான், மேத்யூ ஷார்ட் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget