மேலும் அறிய

GT vs PBKS 1st Innings Highlights: பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்பின் பவுலிங் எடுபடுமா? குஜராத் அணிக்கு 154 ரன்கள் இலக்கு..!

GT vs PBKS பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் மொகித் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டி பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

இரு அணிகளும் தோல்விக்கு பிறகு மோதுவதால் வெற்றிப் பாதைக்கு திறம்ப அணியில் மாற்றங்களைச் செய்து இருந்தது. குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினார். அதேபோல், அந்த அணியில் உள்ள அனுபவ பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா ப்ளேயிங் லெவனில் இடம் பிடித்தார். அதேபோல் பஞ்சாப் அணியில் கடந்த மூன்று போட்டிகளில் வெளியில் அமரவைக்கப்பட்ட ரபாடா இம்முறை அணியில் சேர்க்கப்பட்டார். 

இதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே தொடக்க வீரர் ப்ராப் சிம்ரன் தனது விக்கெட்டை முகமது ஷமி பந்து வீச்சில் இழந்தார். இதனால் அந்த அணி தடுப்பாட்டத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷிகர் தவானுடன் கைகோர்த்த மேத்யூவ் ஷார்ட் அடித்து ஆடினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. 

பவர்ப்ளேவில் ஜோஸ்வா லிட்டில் வீசிய நான்காவது ஓவரில் ஷிகர் தவான் கேட்ச் ஆகி வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்து இருந்தது. அதன் பின்னர் 7வது ஓவரை வீசிய ரஷித் கானின் பந்து வீச்சில் அதிரடியாக ரன்கள் குவித்து வந்த மேத்யூவ் ஷார்ட் க்ளீன் போல்ட் ஆனார். இதனால் போட்டியில் குஜராத் அணியின் ஆதிக்கம் தொடங்கியது. 

இதன் பின்னர் நிதானமாக ஆடி வந்த பஞ்சாப் அணி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டியது. ஒரு கட்டத்திற்கு மேல் குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சினால் பஞ்சாப் அணியால் ரன்கள் சேகரிக்கவே முடியவில்லை. மொகித் ஷர்மா வீசிய 13வது ஓவரில் பஞ்சாப் அணியின் ஜிதேஷ் சர்மா தனது விக்கெட்டை இழக்க போட்டியில் குஜராத் அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. மிகவும் மந்தமான ரன் குவிப்பில் ஈடுபட்ட பஞ்சாப் அணி 16வது ஓவரில் தான் 100 ரன்களை எட்டியது. இறுதி ஓவர்களில் பஞ்சாப் அணி அடித்து ஆடியதால் கொஞ்சம் நல்ல  ஸ்கோரை எடுத்தது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான் சிக்ஸர்கள் பறக்கவிட்டதால் 150 ரன்களைக் கடக்க உதவியது. 

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் மொகித் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget